Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டைனோசராகவும் மாற வைத்த கொரோனா... விராட்டின் புதிய அவதாரம்

மும்பை : வீட்டிற்குள் முடங்கியுள்ள கேப்டன் விராட் கோலி, பல்வேறு அவதாரங்களை எடுத்து பார்த்தார். பயிற்சி, பிட்னஸ் வீடியோக்களையும் வெளியிட்டார்.

இதுவெல்லாம் அவருக்கு போதவில்லை போல. தற்போது தன்னுடைய வீட்டிலேயே டைனோசர் அவதாரம் எடுத்துள்ளார். இந்த வீடியோவை அனுஷ்கா சர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Anushka Sharma shares hilarious dinosaur Virat Kohli video on twitter

வீட்டிற்குள் டைனோசர் போல கைகளை முன்னாள் வைத்துக் கொண்டு வரும் விராட் கோலியை படம்பிடித்த அனுஷ்கா, கேப்ஷனுடன் அதை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள கேப்டன் விராட் கோலி -அனுஷ்கா சர்மா ஜோடி, தங்களது பொழுதுகளை குதூகலமாக கழிப்பதுடன், தங்களின் ரசிகர்களையும் விதவிதமான போஸ்ட்கள் மூலம் என்டர்டெயின்மெண்ட் செய்துக் கொண்டே இருக்கின்றனர். திடீரென பார்த்தால் கோலிக்கு முடிவெட்டி விடுகிறார் அனுஷ்கா. பின்பு பார்த்தால் இருவரும் லைவ் சாட்டில் இணைகிறார்கள்.. திரும்பி பார்த்தால் விராட்டின் கடுமையான பளுதூக்கும் வீடியோ வந்து விழுகிறது.

Anushka Sharma shares hilarious dinosaur Virat Kohli video on twitter

இவ்வாறு ரூம் போட்டு யோசித்து இவர்கள் இருவரும் அடிக்கும் லூட்டிக்கு சமூக வலைதளங்களில் காத்திருந்து ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளி தெளிக்கிறார்கள். தற்போது விராட் கோலி டைனோசர் அவதாரம் எடுத்துள்ளார். கைகளை முன்னே தூக்கிக்கொண்டு டைனோசர் போல இவர் நடந்துவர, தன்னுடைய வீட்டில் டைனோசரை பார்த்ததாக கேப்ஷனுடன் வீடியோ வெளியிட்டுள்ளார் அனுஷ்கா. சிரிப்பு மற்றும் டைனோசர் எமோஜிகளுடன் இதை பதிவிட்டுள்ளார் அவர். மனிதர் டைனோசர் போல நடக்க ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.

Story first published: Wednesday, May 20, 2020, 20:25 [IST]
Other articles published on May 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+