Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அனுஷ்கா சர்மா கர்ப்பம்... துபாயில் முத்தங்களை பரிமாறி கொண்டாடிய விராட் -அனுஷ்கா ஜோடி

துபாய் : குவாரன்டைன் காலத்தை முடித்துவிட்டு தனியார் பீச்சில் தங்களது கொண்டாட்டத்தை மேற்கொண்டனர் ஆர்சிபி அணி வீரர்கள்.

அப்போது அனுஷ்கா சர்மாவின் கர்ப்பத்தை விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி கேக் வெட்டி கொண்டாடியது.

இந்த கொண்டாட்டத்தின்போது முத்தங்களையும் அந்த ஜோடி பகிர்ந்து கொண்டது. இதனிடையே அந்த அணியின் வீரர் யுஸ்வேந்திர சஹலும் தன்னுடைய நிச்சயதார்த்தத்தையொட்டி கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தனியார் பீச்சில் கொண்டாட்டம்

தனியார் பீச்சில் கொண்டாட்டம்

பெங்களூருவில் 7 நாட்கள் மற்றும் துபாயில் 7 நாட்கள் குவாரன்டைனை முடித்துவிட்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினர் தற்போது தனியார் பீச் ஒன்றில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 15 நாட்களாக ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல் இருந்த நிலையில் தற்போது இந்த கொண்டாட்டம் அவசியமானதாக இருந்ததாக அணியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாவில் வீடியோ வெளியீடு

இன்ஸ்டாவில் வீடியோ வெளியீடு

முன்னதாக அணியின் வீரர்கள் முதல்கட்ட பயிற்சியிலும் ஈடுபட்ட நிலையில், தாங்கள் கொண்டாட்டத்திலும் பயிற்சியிலும் எதிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதாக அவர்களின் நடவடிக்கைகள் இருந்தன. அணி வீரர்களின் இந்த கொண்டாட்டம் குறித்து ஆர்சிபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது.

கேக் வெட்டி கொண்டாடிய ஜோடி

கேக் வெட்டி கொண்டாடிய ஜோடி

சமீபத்தில் அனுஷ்கா சர்மாவின் கர்ப்பம் குறித்து விராட் கோலி அறிவித்த நிலையில் இந்த கொண்டாட்டத்தின் போது விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் ஆர்சிபி அணி வீரர்களுக்கிடையில் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து இருவரும் முத்தங்களையும் பரிமாறிக் கொண்டனர்.

நிச்சயதார்த்தத்தை கொண்டாடிய சஹல்

நிச்சயதார்த்தத்தை கொண்டாடிய சஹல்

இரு தினங்களுக்கு முன்பு விராட் -அனுஷ்கா ஜோடி, அனுஷ்காவின் கர்ப்பம் குறித்து சமூக வலைதளத்தில் அறிவித்தனர். இதையடுத்து அவர்களுக்கு ரசிகர்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்தன. இதனிடையே, சமீபத்தில் தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்த அணியின் வீரர் யுஸ்வேந்திர சஹலும் தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும்வகையில் கேக் வெட்டி கொண்டாடினார்.

Story first published: Sunday, August 30, 2020, 14:06 [IST]
Other articles published on Aug 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+