டெல்லியில் அனுஷ்காவுடன் டின்னருக்குப் போன கோஹ்லி
டெல்லி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் சேர்ந்து டெல்லியில் உள்ள உணவகத்தில் டின்னர் சாப்பிட்டுள்ளனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி நள்ளிரவு நேரத்தில் தனது காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் காரில் வலம் வந்தார். அது குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி வந்தன. தற்போது மீண்டும் காரில் வலம் வருவதை துவங்கியுள்ளார்.

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டத்தை பார்க்க அனுஷ்கா சிட்னி கிளம்பியபோதே ரசிகர்கள் கடுப்பில் முணுமுணுத்தனர்.
அனுஷ்கா சிட்னி அரங்கில் அமர்ந்து பார்த்த போட்டியில் கோஹ்லி ஒரு ரன் எடுத்து அவுட்டானார். மேலும் உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து வெற்றி பெற்ற இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் கடுப்பான ரசிகர்கள் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு அனுஷ்கா தான் காரணம் என்று கூறி திட்டித் தீர்த்தனர்.
இந்தியா திரும்பிய கோஹ்லி விமான நிலையத்தில் காதலியை கையைப் பிடித்து அழைத்துச் சென்றார். அதற்கும் ரசிகர்கள் திட்டினர். இந்நிலையில் திங்கட்கிழமை இரவு கோஹ்லி தனது காதலியை அழைத்துக் கொண்டு டெல்லியில் உள்ள உணவகத்திற்கு சென்று சாப்பிட்டுள்ளார்.
அதன் பிறகு அவர்கள் ரேஞ்ச் ரோவர் காரில் கிளம்பியபோது எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications