For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அனுஷ்காவுடன் சேர்ந்து வசிக்க ஜாகையை மும்பைக்கு மாற்றும் கோஹ்லி?

By Siva

மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் சேர்ந்து வசிக்க டெல்லியில் இருந்து மும்பைக்கு ஜாகையை மாற்றுகிறாராம்.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருகிறார். இத்தனை நாட்களாக காதல் பற்றி கேட்டால் கண்டுகொள்ளாமல் இருந்த அவர்கள் அண்மையில் தான் உண்மையை ஒப்புக் கொண்டனர்.

Anushka Sharma, Virat Kohli may move in together?

கோஹ்லி டெல்லியிலும், அனுஷ்கா மும்பையிலும் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் வசிக்க முடிவு செய்துள்ளார்கள். இதையடுத்து அவர்கள் மும்பை எல்லாம் தேடி இறுதியில் வோர்லி பகுதியில் அபார்ட்மென்ட் ஒன்றை தேர்வு செய்துள்ளார்களாம்.

அனுஷ்கா கோஹ்லியை விரைவில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். ஆனால் கோஹ்லியோ முதலில் கிரிக்கெட்டில் கவனம் செலுத்திவிட்டு அதன் பிறகு திருமணம் பற்றி பார்க்கலாம் என்கிறாராம்.

இந்த திருமண விவகாரத்தால் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நேரத்தில் தான் ஒரே வீட்டில் வசிக்க முடிவு செய்துள்ளார்கள்.

Story first published: Sunday, October 25, 2015, 16:48 [IST]
Other articles published on Oct 25, 2015
English summary
Cricketer Virat Kohli and his girlfriend Anushka Sharma are reportedly going to move in together. They have allegedly zeroed in an apartment in Worli, Mumbai.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+