Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘என் அழகனே’.. கோலியின் பிறந்தநாளுக்காக அனுஷ்கா கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட்.. வைரலாகும் புகைப்படம்!

அமீரகம்: விராட் கோலியின் பிறந்த நாளுக்காக அனுஷ்கா ஷர்மா கொடுத்துள்ள பரிசு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

19வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் கோலி இன்று இந்திய அணியின் 3 வடிவ அணிக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

கேப்டனின் பிறந்தநாள்

கேப்டனின் பிறந்தநாள்

விராட் கோலி தற்போது டி20 உலகக்கோப்பையில் இக்கட்டான சுழலில் இருக்கும் போதிலும், அவரின் பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் மறக்கவில்லை. சமூக வலைதளங்களில் அவரின் பேட்டிங் வீடியோக்களை பதிவிட்டு புகழ்ந்து வருகின்றனர். இதே போல கிரிக்கெட் உலகை சேர்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கோலியின் மனைவி தெரிவித்துள்ள வாழ்த்து மடல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

மனைவியின் வாழ்த்து

மனைவியின் வாழ்த்து

தனது கணவர் விராட் கோலியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அனுஷ்கா ஷர்மா, அதில் உருக்கமான வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளார். அதாவது, இந்த புகைப்படத்திற்கும் சரி, நமது வாழ்கையை நீங்கள் வழிநடத்துவதற்கும் சரி, எந்தவித ஃபில்டர்களும் போட தேவையில்லை. அது அவ்வளவு அழகானது. உங்கள் வாழ்கை, நேர்மை மற்றும் தைரியத்தினால் ஆனது.

கோலியின் சிறப்பு

கோலியின் சிறப்பு

உங்களை போன்று மிகவும் கடினமான பாதைகளை இருந்து மேலே வந்தவர்களில் உங்களை போல யாரும் இருக்க மாட்டார்கள். மனதில் எவ்வித வஞ்சகத்தையும் வைத்துக்கொள்ளாமலும், பயமின்றி இருப்பதும் தான் உங்கள் சிறப்பு.

உலகம் அறிய வேண்டும்

உலகம் அறிய வேண்டும்

வழக்கமாக நாம் இருவருமே ஒருவரை பற்றி மற்றொருவர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுக்கொள்ள மாட்டோம். ஆனால் நீங்கள் எப்படிபட்ட சிறந்த மனிதர் என்பதை இந்த உலகம் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நான் இதனை செய்துள்ளேன். நமது வாழ்கையை மேலும் மேலும் அழகாய் மாற்றி வரும் உங்களுக்கு நன்றி. பிறந்த நாள் வாழ்த்துகள் என் அழகனே என அவர் பதிவிட்டுள்ளார்.

திருமண வாழ்கை

திருமண வாழ்கை

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதியன்று திருமணமானது. இவர்களுக்கு தற்போது வாமிகா என்ற 9 மாத மகள் உள்ளார். தற்போது டி20 உலககோப்பை தொடரில் பங்கேற்றுள்ள கோலியுடன் அனுஷ்கா மற்றும் வாமிகாவும் உடன் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 5, 2021, 18:50 [IST]
Other articles published on Nov 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+