கோஹ்லி மேன் ஆப் தி மேச் பெறனும், அதை அனுஷ்கா வாங்கனும்.. ஜிந்தாவின் ஆசை!
மும்பை: அடுத்த உலகக் கோப்பை போட்டியில் விராட் கோஹ்லி ஆட்டநாயகன் விருது வெல்லும் போது அதனை அனுஷ்கா சர்மா வாங்க வேண்டுமென்று பிரபல பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் விராட் கோஹ்லி ஒரு ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
இதற்குக் காரணம் அவரது காதலியான அனுஷ்கா சர்மாதான் என்று ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் கடுமையாக விமர்சனம் எழுந்தது. இதற்கு பாலிவுட் நடிகர்களும், நடிகைகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனுஷ்கா சர்மாவிற்கு ஆதரவாகவே கருத்துக்களை தெரிவித்தனர்.

கோஹ்லி - அனுஷ்கா
இந்த நிலையில் தற்போது ஐ.பி.எஸ் ஆட்டத்தில் பெங்களூரு அணியில் விராட் கோஹ்லி விளையாடி வருகிறார். அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அனுஷ்கா சர்மாவும் உடன் சென்று வருகிறார். இதற்கும் விமர்சனங்கள் எழாமல் இல்லை.

பிரீத்தி ஜிந்தா
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான பிரீத்தி ஜிந்தா கூறுகையில், ''இது முதுகெலும்பற்றவர்களின் சிணுங்கல் போன்றது. இவர்களது செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளார்.

ஆட்ட நாயகன் விருது
அடுத்த முறை உலகக் கோப்பை போட்டியில் விராட் கோஹ்லி ஆட்ட நாயகள் விருது பெறும் போது, அந்த விருதை அனுஷ்கா சென்று வாங்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்துக்கும் நடிகர்- நடிகைகள் விமர்சிக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாது'' என்றும் கூறியுள்ளார்.

பஞ்சாப் சாம்பியன்
அதோடு நடப்பு ஐ.பி.எல். தொடரில், பஞ்சாப் அணி சாம்பியன் ஆகும் என்றும் பிரீத்தி ஜிந்தா நம்பிக்கை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications