Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது... கோஹ்லி... ஷாட்டை திருப்பு... அய்... அனுஷ்கா.. சங்கு ஊதிய ரசிகர்!

சிட்னி: நேரம் சரியில்லாவிட்டால் எது நடந்தாலும் அது விரோதமாகவே இருக்கும். விராத் கோஹ்லிக்கு இது சரியாக பொருந்தும்.

இவரைப் போல உயரத்திற்கு படு வேகமாக வந்தவர்கள் யாரும் இல்லை. ஆனால் ஒரு பெண்ணைக் காதலிக்கப் போய் இவரைப் போல படாதபாடு பட்டவர்களும் யாரும் இல்லை.

Anushka witnesses Kohli's fall in Sydeny

அனுஷ்கா சர்மாவைக் காதலிப்பதற்கு முன்பு வரை விராத் கோஹ்லி தீயாக வேலை செய்து கொண்டிருந்த குமாராகத்தான் இருந்தார். ஆனால் என்று அனுஷ்காவைக் காதலிக்க ஆரம்பித்தாரோ அதன் பிறகு சொல்லிக் கொள்ளும்படியாக நிறையவே சொதப்பி வருகிறார்.

கிட்டத்தட்ட சுமார் மூஞ்சிக் குமார் என்று கூறும் அளவுக்கு நிலைமை போய் விட்டது. இங்கிலாந்து தொடரின்போது படு மோசமாக ஆடியவர் கோஹ்லி. அப்போதுதான் அவருக்கும் அனுஷ்காவுக்கும் இடையே காதல் படு மும்முரமாக இருந்த நேரம்.

அந்தத் தொடருக்குப் பின்னர் சற்று மீண்டு வந்தார். ஆனால் தற்போது முக்கியப் போட்டிகளில் மீண்டும் சொதப்ப ஆரம்பித்து விட்டார்.

இன்று என்ன போட்டி என்பது பச்சைப் புள்ளைக்குக் கூட தெரியும்.. இன்றைய போட்டியில் கோஹ்லிக்கு நிறைய பொறுப்பு உள்ளது என்று கேப்டன் டோணியே கூட கூறியிருந்தார். ஆனால் சற்றும் பொறுப்பே இல்லாமல் அவுட்டாகிப் போய் விட்டார் கோஹ்லி.

என்ன கொடுமை என்றால் அனுஷ்கா சர்மா வந்து ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த காட்சியை கேமரா காட்ட, அவர் புன்னகைத்தபடி சிரித்தவாறு கையை ஆட்ட.. அடுத்த கேமரா கோஹ்லி முகத்தைக் காட்ட.. கொஞ்ச நேரத்தில் கோஹ்லி அவுட்.!

அதை விட முக்கியமான காட்சி இதுதான்.. கோஹ்லி பேட் செய்ய வந்தபோது ஆடியன்ஸ் வரிசையில் இருந்த தலைப்பாகை போட்ட ரசிகர் ஒருவர் கையில் வைத்திருந்த சங்கை எடுத்து ஊஊஊஊஊ என்று பலமாக ஊதி வரவேற்றார். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே கோஹ்லி கொய் என்று அவுட்டாகிச் செல்லவே.. அந்த சங்கு பார்ட்டி கண்ணிலிருந்து பொல பொலவென தண்ணீர்...!

இதுக்குத்தான் சொல்றது மழை பெய்யறப்ப குடையை எடுத்துட்டு போங்கய்யான்னு... (டென்ஷனில் வார்த்தை தடுக்குது பாருங்க!)

Story first published: Thursday, March 26, 2015, 15:16 [IST]
Other articles published on Mar 26, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+