For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலி BBL தொடரில் விளையாடுகிறாரா? சிட்னி சிக்சர்ஸ் அணி வெளியிட்ட அறிவிப்பு.. உண்மை என்ன?

மும்பை: ஐபிஎல் பாணியில் உலகம் முழுவதும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்களை தவிர மற்ற நாட்டு வீரர்கள் அனைத்து டி20 தொடரிலும் விளையாடி வருகின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு நாட்டிலும் ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது.

இளம் வீரர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும். ஆனால் இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருப்பதால், அது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைகிறது.

Virat kohli

குறிப்பாக ipl தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் இந்திய ஆடு களங்களில் தற்போது சிறப்பாக விளையாட தொடங்கி விட்டார்கள். அண்மையில் நியூசிலாந்து அணி கூட இந்தியாவை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியது. சிஎஸ்கே அணிக்காக விளையாடும் ரச்சின் ரவீந்திரா, இந்த தொடருக்கு தயாராகும் விதமாக சிஎஸ்கே பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்ட சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் இந்திய அணி வீரர்களும் வெளிநாட்டு தொடர்களில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் கழித்து தான் வெளிநாட்டு தொடருக்கு செல்ல வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்திருக்கிறது. அண்மையில் எஸ் ஏ டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் பங்கேற்றார்.

இதேபோன்று கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 தொடரில் யுவராஜ் சிங் விளையாடினார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்தும் பிக் பாஸ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விராட் கோலி விளையாட ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியிடப்பட்டது.

சிட்னி சிக்ஸர் சமூக வலைத்தள பக்கத்திலிருந்து இந்த செய்தி வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இதன் மூலம் விராட் கோலி ஆஸ்திரேலியா பிக் பாஸ் தொடரில் விளையாட போகிறார் என்று அவர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் அதன் பிறகு தான் தெரிந்தது. இது ஏப்ரல் முதல் தேதியை முன்னிட்டு நடத்தப்படும் முட்டாள் தினம் செய்தி என்று.

விராட் கோலியை வைத்து இவ்வாறு செய்தியை வெளியிட்டால் ரசிகர்கள் நம்பி விடுவார்கள் என சிட்னி சிக்ஸர் அணி இந்த வேலையை செய்து வெற்றி பெற்றுள்ளது. ஆனால் நம்மை ஏமாற்ற முடியாது அல்லவா! கிரிக்கெட் தொடர்பான உண்மையான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மைக்கேல் தமிழ் தளத்தையே பின்பற்றுங்கள்.

Story first published: Tuesday, April 1, 2025, 14:03 [IST]
Other articles published on Apr 1, 2025
English summary
April 1 Fools Day- Sydney Sixers Post about Virat kohli made fans Believe
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+