கொழும்பு : அரவிந்தா டி சில்வா ஸ்ரீ லங்கா அணியை வழி நடத்தியவர். 1997ல் கொழும்பு டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் நாட் அவுட்டாக திகழ்ந்தவர், அதுவும் சதங்கள் எடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக. 138* & 103*
இந்த இரண்டு சதங்கள் தவிர மற்ற இரண்டு சதங்கள். சலீம் மாலிக் 155, சனத் ஜெயசூர்யா ,113.இன்னும் 7 டெஸ்டுக்கள் விளையாடியிருந்தால் சதம் டெஸ்டுக்கள் விளையாடிய பெருமை இவருக்கு கிட்டியிருக்கும். ஆனால் விளையாடியது டெஸ்டுக்கள் 93.

6361 ரன்கள். 267 அதிக பட்ச ரன்கள். சராசரி 42.97. டெஸ்ட் சதங்கள் 20. அரை சதங்கள் 22. டெஸ்டுக்களில் சிக்ஸர்கள் 48. கேட்சுக்கள் 43.
ஒரு நாள் பந்தயங்களில் 9000 க்கும் அதிகமாக ரன்களை குவித்தவர். முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் 15000 ரன்கள் சேர்த்தவர்.
29 டெஸ்ட் விக்கெட்டுக்கள்வீழ்தியவர். ஒரு நாள் ஆட்டங்களில் இவரது ஆப் பிரேக் பவுலிங் இவருக்கு பெற்று தந்தது 106 விக்கெட்டுக்கள்.
எல்லா வகை கிரிக்கெட் விளையாட்டுக்களில் இவர் பெற்ற ஆட்ட நாயகர் விருதுகள் 41.
இவர் எடுத்த சதம் ஸ்ரீலங்கா அணி பாகிஸ்தான் மண்ணில் ஒரு நாள் உலக கோப்பை பைனலில் ஆஸ் திரேலிய அணியை வெல்ல பெரிதும் உதவியது.1991ல் ஒரு டெஸ்டில் நியூ ஜிலா ந்து அணிக்கு எதிராக, ஆக்லாந்தில் இவரது ஸ்கோர் 96 மற்றும் 123.
1995 ல் பாகிஸ்தானுக்கு எதிரான பைசல்லாபாத் டெஸ்டில் டி சில்வாவின் ஸ்கோர் 0 & 105.
ஒரு வருடத்தில் ( ஜனவரி முதல் டிசம்பர் வரையில்) 1997 ஆம் வருடம் மொத்தம் 10 சதங்கள்.இவரது கடைசி டெஸ்டில் ஆட்ட நாயகர் முத்தையா முரளீதாரன் 10
விக்கெட்டுக்கள் எடுத்தார். 2002 ல் கொழும்புவில் வங்க தேசத்திற்கு எதிராக நடைப் பெற்ற இந்த டெஸ்டில் ஸ்ரீலங்கா அணி வென்றது.கேப்டன் சனத் ஜெயசூர்யா எடுத்த ரன்கள் 145.அரவிந்தா டி சில்வா தனது டெஸ்ட்.கிரிக்கெட் பயணத்தை இரட்டை சதத்தோடு முடிவு செய்தார். அவரது ரன்கள் 206.
வாசுதேவன், பெங்களூரு