Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெண்டல் பிரஷர்.. ஸ்மார்ட் "தாக்குதல்" திட்டம்.. கோலியை நிற்க வைத்த ஆர்ச்சர்.. சென்னையில் திக்திக்!

சென்னை: இந்திய கேப்டன் கோலி குழம்பி போகும் அளவிற்கு இன்று இந்தியாவிற்கு எதிராக ஆர்ச்சர் பவுலிங் செய்து வருகிறார்.

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி மிகவும் வலிமையான நிலையில் இருக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த 578 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி உள்ளது.

இந்திய அணியில் அஸ்வின், பும்ரா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இங்கிலாந்து அணி இமாலய ஸ்கோர் எடுத்துள்ள நிலையில் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான பேட்டிங்கில் கடுமையாக திணறி வருகிறது. ஓப்பனிங் இறங்கிய ரோஹித் சர்மா வெறும் 6 ரன்னில் அவுட் ஆனார். இன்னொரு பக்கம் அதிரடியாக ஆடி வந்த சுப்மான் கில்லும் 29 ரன்னுக்கு அவுட் ஆனார்.

எப்படி

எப்படி

இந்திய அணியின் ஓப்பனிங் வீரர்களை மிக எளிதாக ஆர்ச்சர் சரித்து உள்ளார். மிக துல்லியமான பந்துகளை புதிய பந்தில் வீழ்த்தி ஆர்ச்சர் விக்கெட் வீழ்த்தி உள்ளார். இவர் போட்ட முதல் 5 ஓவரிலேயே ஆர்ச்சர் யார்க்கர் தவிர அணைத்து விதமான பந்துகளையும் வீசிவிட்டார்.

வேரியேஷன்

வேரியேஷன்

ஆர்ச்சர் போட்ட முதல் 5 ஓவர்களில் பவுன்சர், ஸ்லோ பால், இன் ஸ்விங், லேசான அவுட் ஸ்விங் என்று எதிர்பார்க்காத அனைத்து வேரியேஷன்களையும் காட்டினார். அதிலும் ரோஹித் சர்மாவிற்கு இவர் பந்து வீசிய விதம் அற்புதமாக இருந்தது.

புஜாரா

புஜாரா

இன்னொரு பக்கம் புஜாராவிற்கும் இவர் மிக சிறப்பான லைனில் வீசினார். பும்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் காட்ட தவறிய வேரியேஷன்களை ஆர்ச்சர் எளிதாக காட்டினார். இது தொடக்கத்திலேயே ரோஹித் சர்மாவிற்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்தது. பந்து எப்படி செல்லும் என்று கணிக்க முடியாமல் ரோஹித் திணறினார்.

 முடியவில்லை

முடியவில்லை

கில் இங்கிலாந்து அணி மீது அழுத்தம் செலுத்த விரும்பினார். ஆனால் கில் காலை மடக்காமல் ஆடுவதை கவனித்து அதற்கு ஏற்றபடி பவுலிங் செய்தார். சரியாக ஷார்ட் பந்துகளை வீசி கில்லையும் ஆர்ச்சர் வீழ்த்தினார். கண்டிப்பாக இரண்டு விக்கெட்டும் ஆர்ச்சரின் ஸ்மார்ட் பிளான்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்

ஸ்மார்ட்

கோலியே ஆர்ச்சரின் வேரியேஷன்களை பார்த்து கொஞ்சம் மிரண்டு போனார் என்றுதான் கூற வேண்டும். என்ன இரண்டு நாட்களாக ஸ்விங் ஆகாத, பவுன்ஸ் ஆகாத பந்து இன்று பவுன்ஸ் ஆகிறதே என்று கொஞ்சம் குழம்பி போனார். இதனால் களத்தில் கொஞ்சம் பயந்து பயந்துதான் தற்போது கோலி நின்று வருகிறார்.

Story first published: Sunday, February 7, 2021, 12:46 [IST]
Other articles published on Feb 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+