
ஒருநாள் தொடரில் ஆர்ச்சர் விலகல்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டு தொடர்கள் முடிவடைந்துள்ளன. அடுத்ததாக ஒருநாள் தொடர் நாளை புனேவில் துவங்கி நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து முன்னணி பௌலர் ஜோப்ரா ஆர்ச்சர் பங்கேற்க மாட்டார் என்ற கூறப்பட்டுள்ளது. முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் தொடர் மட்டுமின்றி ஐபிஎல்லின் முதல் பாதியிலும் அவர் விளையாட மாட்டார் என்று இசிபி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சில்வர்வுட் பாராட்டு
இதையடுத்து அவர் தனது காயத்திற்கான சிகிச்சை மற்றும் பிட்னஸ் பயிற்சிகளில் ஈடுபடும்வகையில் இங்கிலாந்து திரும்பியுள்ளார். இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை மற்றும் ஆஷஸ் தொடர்களில் பங்கேற்கும்வகையில் அவர் சரியான முடிவை எடுத்துள்ளதாக அணியின் கோச் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.

சரியான முடிவு
அணிக்கு முக்கியத்துவம் தரும்வகையில் அவர் சிறப்பான இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இது அணி நிர்வாகமும் ஆர்ச்சரும் இணைந்து எடுத்துள்ள முடிவு என்றும் இது அணியின் நலனை கருத்தில் கொடுத்து அவர் எடுத்துள்ள சரியான முடிவு என்றும் செய்தியாளர்களிடம் பேசிய சில்வர்வுட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உதவிகள் செய்வது கடமை
இந்த முடிவின் மூலம் இங்கிலாந்து அணிக்காக அவர் எவ்வளவு விருப்பத்துடன் விளையாடுகிறார் என்பது தெரியவந்துள்ளதாகவும் சில்வர்வுட் கூறியுள்ளார். அவரின் இந்த முடிவுக்கு மரியாதை அளிப்பதும், அவருக்கு தேவையான உதவிகளை செய்வதும் அணியின் கடமை என்றும் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











