For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடடே!! ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்த 6 வயது சிறுவன் ஆர்ச்சி ஷில்லர்.. எப்படி தெரியுமா?

அடிலெய்டு : இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது ஆஸ்திரேலிய அணி.

அதற்கான பயிற்சியின் போது திடீரென ஒரு ஆறு வயது சிறுவன் ஆஸ்திரேலிய அணியின் உடை அணிந்து அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருக்க, யார் இந்த குட்டிப் பையன்? என பலரும் புருவம் உயர்த்தினர்.

அந்த குட்டிப் பையன் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார் எனவும் கூற ஆச்சரியமாக இருந்தது.

இதயத்தில் பிரச்சனை

இதயத்தில் பிரச்சனை

இது பற்றி, என்ன ஏதென்று விசாரித்தால், மனதை கனக்க வைக்கும் ஆறு வயது சிறுவன் ஆர்ச்சி ஷில்லரின் கதை தெரிய வந்தது. ஆர்ச்சி ஷில்லருக்கு இதயத்தில் குறைபாடுகள் உள்ளது. அவன் மூன்று மாத குழந்தையாக இருக்கும் போது அவனுக்கு இதயக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதய வால்வுகளில் பிரச்சனை இருப்பதோடு இதயத் துடிப்பும் நிலையாக இல்லை. இது வரை 13 அறுவை சிகிச்சைகளை சந்தித்துள்ளான் ஆர்ச்சி.

கிரிக்கெட் மீது ஆர்வம்

கிரிக்கெட் மீது ஆர்வம்

இந்த நிலையில், "மேக்-ய-விஷ்" எனப்படும் அமைப்பு இந்த சிறுவனின் கிரிக்கெட் ஆசைகளை பற்றி தெரிந்து கொண்டது. ஆர்ச்சி, ஷேன் வார்னேவை போல லெக் - ஸ்பின் போட முயற்சி செய்வது உள்ளிட்ட அவனது கிரிக்கெட் விருப்பங்களை அடுத்து ஆர்ச்சியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் ஒரீரு போட்டிகளில் சேர்த்துக் கொள்ள ஆஸ்திரேலிய அணிக்கு சிபாரிசு செய்தது.

டெஸ்ட் அணியில் இணைந்த ஆர்ச்சி

இதையடுத்து, இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி மற்றும் பாக்ஸிங் டே டெஸ்ட் எனப்படும் டிசம்பர் இறுதியில் துவங்கும் டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் ஆர்ச்சி ஷில்லர் இருப்பான். அணியில் விளையாடா விட்டாலும், பயிற்சி உள்ளிட்ட விஷயங்களில் ஆர்ச்சி கலந்து கொள்வதோடு மற்ற ஆஸ்திரேலிய வீரர்களோடு நேரம் செலவிட முடியும்.

கோலி தான் டார்கெட்

கோலி தான் டார்கெட்

ஆர்ச்சி தன் லெக்-ஸ்பின்னால் யாரை ஆட்டமிழக்க செய்வேன் என கூறுகிறான் தெரியுமா? தற்போது உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என கருதப்படும் நம் இந்திய அணி கேப்டன் விராட் கோலியை தான்.

Story first published: Tuesday, December 4, 2018, 16:43 [IST]
Other articles published on Dec 4, 2018
English summary
Do you know? Archie Schiller, a six year old kid included in the Australian test squad. Here, is the story of Archie Schiller.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+