
தமன்னா
பாலிவுட்டில் கவனம் செலுத்தும் தமன்னா விராத் கோஹ்லியை காதலிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.

அனுஷ்கா
கோஹ்லி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை டேட் செய்வதாக தற்போது கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் நள்ளிரவில் ஒன்றாக சென்றதைஒருவர் பார்த்துள்ளார்.

விளம்பரம்
கோஹ்லியும், அனுஷ்காவும் சேர்ந்து ஷாம்பூ விளம்பரம் ஒன்றில் ஜோடியாக நடித்தபோது அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டுவிட்டதாம். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மும்பை வெர்சோவா பகுதியில் அனுஷ்காவின் கருப்பு நிற ரேஞ்ச் ரோவரில் அவருடன் கோஹ்லி சென்றுள்ளார்.

தொப்பி
காரை நிறுத்தி அனுஷ்காவும், கோஹ்லியும் நள்ளிரவில் ஸ்வாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்ததை ஒருவர் பார்த்துள்ளார். கோஹ்லி தன்னை யாரும் அடையாளம் காணாமல் இருக்க தொப்பி அணிந்திருக்கிறார். சிறிது நேரம் பேசிவிட்டு அவர்கள் அனுஷ்காவின் வீடு இருக்கும் யாரி சாலை பக்கம் காரில் சென்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications