நாங்க "சுத்தபத்தமா"த்தான் இருக்கோம், சுயநலமெல்லாம் இல்லை... அடித்துக் கூறும் டோணி!
மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது சுய சாதனைகளை மனதில் கொண்டே விளையாடுவதாக பொதுவான குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது. ஆனால் டோணி அப்படி நினைக்கவில்லையாம். நாங்கள் யாருமே அப்படிப்பட்டவர்கள் இல்லை என்று அவர் அடித்துக் கூறியுள்ளார்.
இந்திய வீரர்கள் யாரும் சுயநலமாக செயல்படுவதில்லை என்று அடித்துக் கூறியுள்ள அவர் இதுகுறித்து இனியும் யாரும் என்னிடம் இதுகுறித்துக் கேட்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார் டோணி.
3வது ஒரு நாள் போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இப்படித் தெரிவித்தார் டோணி.

3 போட்டிகள்... 3 சதம்
இந்திய பேட்டிங் இந்தத் தொடரில் மோசம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதுவரை நடந்துள்ள 3 போட்டிகளில் ரோஹித் சர்மா 2 சதம் போட்டுள்ளார். விராத் கோஹ்லி ஒரு சதமடித்துள்ளார். முதல் போட்டியில் 91 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பாராட்டு
91 ரன்களில் இருந்த நிலையிலும் கூட அணிக்காக ஆடியதாக அவரை பலரும் பாராட்டவே செய்துள்ளனர். அவரும் அணி பெரிய ஸ்கோரை எட்ட வேண்டும் என்ற வேகத்தில்தான் ஆடியும் வந்தார்.

சுயநலமில்லாமல் இருக்கீங்களா!
இந்த நிலையில்தான் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதுகுறித்து செய்தியாளர்கள்க கேட்டனர். அதற்கு டோணி நிச்சயம் இல்லை. சுயநலமாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. இதுகுறித்து என்னிடம் கேட்கவே தேவையில்லை. புள்ளிவிவரமே சொல்லும் என்றார் டோணி.

மேக்ஸ்வெல் பேச்சால்
vஉண்மையில் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வேல் இந்திய வீரர்கள் குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்திருந்தார். சிலர் இலக்குகளை நோக்கி ஆடுகிறார்கள். சிலர் அப்படி இல்லை என்று அவர் கூறியிருந்தார். அவர் இந்திய வீரர்களைத்தான் கூறுவதாக சலசலப்பு எழுந்துள்ளது. இதைத்தான் செய்தியாளர்கள் டோணியிடம் கேட்டனர்.


Click it and Unblock the Notifications