Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நேற்றும் இதேதான் நடந்தது.. நடுவர்களின் சித்து விளையாட்டால் அதிர்ந்த இங்கிலாந்து அணி.. என்ன ஆச்சு?

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஆடும் இரண்டாவது டெஸ்டில் நடுவர்கள் நடந்து கொள்ளும் விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

2வது டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் இன்னிங்சில் இந்தியா ஆல் அவுட் ஆகியுள்ளது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது.

தற்போது இங்கிலாந்து அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டை இழந்து திணறி வருகிறது. இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுக்கு 17 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

எப்படி

எப்படி

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஆடும் இரண்டாவது டெஸ்டில் நடுவர்கள் நடந்து கொள்ளும் விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது இந்த போட்டியில் ஜாக் லீச் போட்ட 75வது ஓவரின் முதல் பந்தில் ரஹானேவின் பேட்டிற்கு அருகில் பந்து சென்று கேட்ச் சென்றது. இந்த பந்தை கீப்பர் பிடித்த காரணத்தால் இங்கிலாந்து வீரர்கள் விக்கெட் கேட்டனர்.

விக்கெட்

விக்கெட்

எட்ஜாகி விக்கெட் விழுந்துவிட்டது என்று நினைத்து இங்கிலாந்து வீரர்கள் விக்கெட் கேட்டனர். இதையடுத்து உடனே ரிவ்யூ கேட்கப்பட்டது. ஆனால் இந்த ரிவ்யூவில் ரஹானே பேட்டில் பந்து படவில்லை என்று கூறி விக்கெட் கொடுக்கப்படவில்லை. ஆனால் உண்மையில் பந்து கிளவுஸில் பட்டு சென்றது அடுத்த பந்தில்தான் தெரிந்தது.

 மீண்டும்

மீண்டும்

அதன்பின் ரஹானே அதே ஓவரில் அவுட்டாகிவிட்டார். இந்த நிலையில் இங்கிலாந்து அணி இழந்த ரிவ்யூ மீண்டும் அவர்களுக்கே கொடுக்கப்பட்டது. ஒரு ரிவ்யூவில் மூன்றாவது நடுவர் தவறான முடிவை கொடுத்தது பெரிய அளவில் சர்ச்சசையானது. இந்த நிலையில் இன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடுவர் கொஞ்சம் பாரபட்சமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

நடந்து கொண்டார்

நடந்து கொண்டார்

இஷாந்த் சர்மா ஓவரில் ரோரி பர்ன்ஸ் பேட்டிங் செய்த போது அவருக்கு எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது. இது நடுவரின் கால் என்பதால் ரிவ்யூவிலும் விக்கெட் கொடுக்கப்பட்டது. ஆனால் இது மிகவும் க்ளோஸ் கால் ஆகும். இதில் ஒருவரை நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை என்றால், டிஆர்எஸ்ஸிலும் அம்பயர்ஸ் கால் என்று சொல்லி விக்கெட் கொடுக்கப்பட்டு இருக்காது.

மோசம்

மோசம்

பந்து லேசாகவே ஸ்டம்பை உரசி சென்றது. இது போன்ற சமயங்களில் பொதுவாக விக்கெட் கொடுக்கப்படாது . ஆனால் இன்று நடுவர்கள் இந்திய அணிக்கு கொஞ்சம் சாதகமாக செயல்பட்டனர். இங்கிலாந்து அணி இதனால் கொஞ்சம் கலங்கி போய் உள்ளது.

Story first published: Sunday, February 14, 2021, 11:46 [IST]
Other articles published on Feb 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+