For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பார்ரா.. வெட்கமெல்லாம் வருது.. கன்னம் சிவக்குது.. வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல!

Recommended Video

Sakshi teases MS Dhoni| தோனியை வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல!

டெல்லி : முன்னாள் இந்திய கேப்டன் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி இருவரும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக இயங்கி வருபவர்கள். தற்போது மகேந்திர சிங் தோனியை தான் வம்பிழுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் சாக்ஷி பதிவிட, அது வைரலாகியுள்ளது.

டெல்லியின் ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளும் தோனியை க்யூட்டி என்றும், அன்றைய நாளின் க்யூட்டி என்றும் கூறி சாக்ஷி வம்பிழுப்பதும் தொடர்ந்து நண்பர்களிடையேயும் வம்பிழுப்பதும் என இரு வீடியோக்களை பதிவு செய்துள்ளார் சாக்ஷி. இதன்போது தோனி வெட்கப்பட்டு சிரிப்பை அடக்க முயன்றது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 6 மாதங்களாக சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியுள்ள முன்னாள் கேப்டன் தோனி, தன்னுடைய குடும்பத்தினருடன் அதிகமாக நேரங்களை செலவிட்டு வருகிறார். கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்தாலும் தோனி மற்றும் சாக்ஷியின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தவறுவதில்லை.

சமூக வலைதளங்களில் பரபரப்பு

சமூக வலைதளங்களில் பரபரப்பு

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த 6 மாதங்களாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளார். இந்த நேரத்தில் அவர் தனது குடும்பத்தினருடன் அதிகமாக நேரத்தை செலவிட்டு வருகிறார். தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் இணைந்து அவர் கழித்துவரும் இனிமையான பொழுதுகளின் வீடியோக்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர் தொடர்ந்து பதிவிட்டு வருவது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

ஏராளமான பின்தொடர்பவர்கள்

ஏராளமான பின்தொடர்பவர்கள்

கேப்டன் கூல் தோனி மட்டுமின்றி அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். இவரை 33 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் தனது மற்றும் தன்னுடைய குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்குரிய தருணங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இவர் பதிவிடும் தோனியின் தொடர் பதிவுகள், இவருக்கான ரசிகர்களை அதிகப்படுத்தியுள்ளது.

வெட்கப்பட்ட தோனி

இதனிடையே, டெல்லியின் ஹோட்டல் ஒன்றிற்கு தோனி மற்றும் சாக்ஷி சென்ற நிலையில், ஹோட்டலில் தங்குவதற்கான நடைமுறைகளை மேற்கொண்ட தோனியை சாக்ஷி வம்பிழுக்கும் செயலை வீடியோவாக பதிவிட்டு சாக்ஷி தோனி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவரை க்யூட்டி என்றும் க்யூட்டி ஆப் த டே என்றும் கூறி தன்னை திரும்பி பார்க்கும்படி சாக்ஷி கொஞ்சும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

சிரிப்பை அடக்க சிரமப்பட்ட தோனி

இதேபோல சாக்ஷி மற்றொரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அதில் நண்பர்கள் மத்தியில் சாக்ஷி தோனியை மீண்டும் வம்பிழுக்க அதனால் ஏற்பட்ட சிரிப்பை அடக்க தோனி சிரமப்படுவதும் மிகவும் அழகாக பதிவிடப்பட்டுள்ளது. மேலும் தோனியை பார்த்து அவர் வெட்கப்படுகிறாரா என்று சாக்ஷி கேட்க, நண்பர்கள் சிரிக்க, அந்த இடமே ரணகளப்பட்டது.

பின்வாங்கிய தோனி

பின்வாங்கிய தோனி

இதனிடையே, சாக்ஷி வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில் சாக்ஷி மற்றும் தோனி இருவரும் பிரபல பாடகர் அர்மான் மாலிக்கின் ஸ்டேஜ் ஷோவில் பங்கேற்றுள்ளனர். அவர் தோனியை ஸ்டேஜிற்கு அழைக்க அவரிடம் கைகுலுக்கிவிட்டு தோனி பின்வாங்க, சாக்ஷி உள்ளிட்டவர்கள் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் மேடையேற்றுவதாக அந்த வீடியோ செல்கிறது. கூடவே சாக்ஷியும் உடன் செல்லும்படியாக அந்த வீடியோ செல்கிறது.

பாடல் பாடிய அர்மான் மாலிக்

தோனியின் வாழ்க்கைப்படமாக வந்து பாலிவுட், கோலிவுட் என அனைத்து வுட்களிலும் வரவேற்பு பெற்ற எம்.எஸ். தோனி : தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்திற்காக அர்மான் மாலிக் பாடிய புகழ்பெற்ற "கோன் துஜே" பாடலை அர்மான் மாலிக் ஸ்டேஜில் பாடினார். இந்தப் பாடலின்போது ஸ்டேஜில் இருந்த சாக்ஷி மற்றும் தோனி சிறிய அளவிலான கால் அசைவுகளை போட்டநிலையில் கூட்டத்தில் இருந்தவர்கள் ஆர்ப்பரித்தனர்.

சிறந்த பாடகர் என பாராட்டு

சிறந்த பாடகர் என பாராட்டு

கடந்த டிசம்பரில் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேடையேறி பாடல் பாடிய தோனி, தான் சிறந்த பாடகரும் கூட என்பதை வெளியுலகிற்கு தெரியப்படுத்தினார். பழைய இந்திய பாடல் ஒன்றை அவர் பாடிய நிலையில், சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட அந்த பாடல் வீடியோ ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. தன்னுடைய பாடும் திறமையால் அனைவரின் இதயங்களையும் கவர்ந்திருந்தார் தோனி.

Story first published: Wednesday, January 29, 2020, 11:48 [IST]
Other articles published on Jan 29, 2020
English summary
Sakshi teases MS Dhoni In an hotel Reception in between others as "Cutie"
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+