Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதென்னப்பா.. சச்சின் மகன் மட்டும் அம்புட்டு ஒசத்தியா.. !

Recommended Video

சர்ச்சையை கிளப்பிய சச்சின் மகனின் புகைப்படம்- வீடியோ

மும்பை: சச்சினின் வாரிசான அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது இங்கிலாந்தில் இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சியில் பந்து வீசி வருகிறார். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் அவர் யோசனைகளை பெற்றதாக பிசிசிஐ-யே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து விளம்பரப்படுத்தியுள்ளது. இது பலத்த சர்ச்சையை எழுப்பியுள்ளது.

ஏற்கனவே, அர்ஜுன் டெண்டுல்கர் பத்தொன்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும், வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தங்கள் எதிர்ப்பை இணையத்தில் காட்டினார்கள். தொடர்ந்து சச்சின் மகன் பக்கம் இந்திய அணி கூடுதல் கரிசனம் காட்டி வருவது பலரையும் எரிச்சல்படுத்துவதாக உள்ளது.

ரவி சாஸ்திரியின்டிப்ஸ்

பிசிசிஐ போட்டுள்ள ஒரு ட்வீட்டில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன், அர்ஜுன் டெண்டுல்கர் நின்று பேசும் படங்கள் இடம் பெற்றுள்ளது. அந்த ட்வீட்டில், ரவி சாஸ்திரியிடம் அர்ஜுன் ஆலோசனை பெறுவதாக கூறப்பட்டிருந்தது.

நெட்டிசன்கள் கொந்தளிப்பு

நெட்டிசன்கள் கொந்தளிப்பு

அதன், பின் இணையவாசிகள் தங்கள் வேலையை ஆரம்பித்தார்கள். சரமாரியான கேள்விகளை அவர்கள் பிசிசிஐயை நோக்கி அனுப்பி வருகின்றனர். ஆனால் பதில்தான் கிடைக்கவில்லை

அது என்ன அர்ஜூன் மட்டும்

ஏன் மொத்த அண்டர்-19 அணியையும் இங்கிலாந்து அழைத்துச் செல்லாமல் அர்ஜூனுக்கு மட்டும் இந்திய அணியோடு பயிற்சி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது? என பலரும் கேட்டுள்ளனர்.

அர்ஜூனிடம் சாஸ்திரிக்கு என்ன வேலை

இந்திய அணியின் பயிற்சியின் போது, ரவி சாஸ்திரி எதற்கு அர்ஜுனுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர். அதில் ஒருவர் வேடிக்கையாக, ரவி சாஸ்திரியிடம் அறிவுரை கேட்பது அவரது எதிர்காலத்துக்கு ஆபத்தானது என கூறியுள்ளார்.

வாயே திறக்காத பிசிசிஐ

வாயே திறக்காத பிசிசிஐ

இப்படி பலரும், தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர். ரசிகர்கள் மற்றும் மீடியாவின் எந்த கேள்விக்கும், பிசிசிஐ இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. (எப்படி அளிக்கும்!)

இங்கிலாந்தில் அர்ஜூன் முகாம்

இங்கிலாந்தில் அர்ஜூன் முகாம்

அர்ஜூன் இங்கிலாந்தில் தங்கி கிரிக்கெட் பயிற்சி பெற்று வருகிறார். பொதுவாக மும்பையில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டால் பந்து வீசுவார். அது தவிர்த்து, இங்கிலாந்து உள்ளூர் கிளப்கள் மற்றும் இங்கிலாந்தின் லார்ட்ஸ்-இல் பயிற்சி பெற்று வருகிறார். எனவே அங்கு வரும் அணிகளுக்கு அவர் பந்து வீசுவார். சில ஆண்டுகளுக்கு முன், இங்கிலாந்து வீரர்களுக்கு பயிற்சியின் போது பந்து வீசியுள்ளார். ஆனால், இதன் அடிப்படையில் தான் தற்போது இந்திய அணியின் பயிற்சியில் பந்து வீசும் வாய்ப்பை பெற்றாரா? என்பது தெரியவில்லை.

வாரரிசு என்பதுதான் காரணமா

வாரரிசு என்பதுதான் காரணமா

தற்போது இந்திய அணி லண்டனில் உள்ள ஒரு பள்ளி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அங்கேதான், அர்ஜுன் டெண்டுல்கரும் இருக்கிறார். அரசியல், சினிமா, மற்றும் கார்ப்பரேட்களில் இருந்த வாரிசுகளுக்கான சிறப்பு வழி, தற்போது கிரிக்கெட்டிலும் புகுந்து விட்டதோ?










Story first published: Wednesday, June 27, 2018, 11:49 [IST]
Other articles published on Jun 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+