Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL அணிகள் கவனத்திற்கு.. பந்துவீச்சில் பட்டையை கிளப்பிய சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்!

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதி நடைபெறுகிறது. பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை ஐபிஎல் தொடர் மாற்றி இருக்கும் நிலையில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் எப்படியாவது ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு சாதிக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.

அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியில் இடம் பெற்றிருக்கும் பிறகு அவர் பந்து வீச வாய்ப்பு கிடைத்தது. ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடி மூன்று விக்கெட்டுகளும், ஐபிஎல் 2024 சீசனில் ஒரு போட்டியில் விளையாடி விக்கெட் ஏதும் எடுக்காமலும் அர்ஜுன் டெண்டுல்கர் இருக்கிறார்.

ipl 2025 arjun tendulkar ranji trophy

இந்த சூழலில் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை அணி தக்க வைக்கவும் இல்லை. இதனால் அர்ஜுன் டெண்டுல்கர் இம்முறை வேறு அணிக்கு விளையாட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. அர்ஜுன் டெண்டுல்கர் அதன் பிறகு பெரிய தாக்கத்தை ஏதும் ஏற்படுத்தாமல் இருந்தார்.

இந்த நிலையில் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கோவா அணிக்காக விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர் அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஒன்பது ஓவர் வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் 25 ரன்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார்.

இதில் அருணாச்சல பிரதேசத்தை முக்கிய வீரர்களில் அர்ஜுன் டெண்டுல்கர் ஆட்டமிழக்க செய்தார். இதன் மூலம் அருணாச்சல பிரதேஷ் 84 ரன்களில் சுருண்டு இருக்கிறது. 25 வயதான அர்ஜுன் டெண்டுல்கர், கடந்த ஆண்டு மும்பை ரஞ்சி அணியில் இருந்து வெளியேறி கோவா அணிக்கு மாறி விளையாடி வருகிறார்.இந்த போட்டிக்கு முன்பு வரை அர்ஜுன் 14 போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

பேட்டிங்கில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதமும் அடித்து இருக்கிறார். இந்த நிலையில் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு 5 விக்கெட்டுகளை வீழ்த்திருப்பதால் இம்முறை அவர் அதிக விலைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை அணி கடந்த 2023 மெகா ஏலத்தில் 30 லட்சம் ரூபாய்க்கு அர்ஜுன் டெண்டுல்கரை வாங்கியது. தற்போது அர்ஜுன் டெண்டுல்கர் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டிருப்பதால் அவருடைய மதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, November 13, 2024, 17:23 [IST]
Other articles published on Nov 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+