லண்டன்: சர்ரே அணிக்கு எதிராக விளையாடி வரும் அர்ஜூன் டெண்டுல்கரின் பவுலிங் பற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் ஏகத்துக்கும் வைரலாகி இருக்கிறது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு இருக்கும் ரசிகர்கள் எக்கச்சக்கம். அவருக்கு இந்தியா மட்டுமின்று உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர். சிறந்த பேஸ்ட்மேனான சச்சின், அவ்வப்போது சுழற்பந்து வீசி விக்கெட்களையும் வீழ்த்திவர்.

கிரிக்கெட்டில் இவருக்கு மாறாக களமிறங்கி உள்ளார் அவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கர். இடது கைபேட்டிங், இடதுகை வேகப்பந்து வீச்சாளராக அவர் வலம் வருகிறார். 2018ம் ஆண்டு இந்திய அணிக்காக 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலும் இடம் பெற்றார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியவர் அர்ஜூன் டெண்டுல்கர். தற்போது எம்.சி.சி யங் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருக்கிறார். சர்ரே அணிக்கு எதிராக விளையாடி வருகிறார்.
இந்த போட்டியில் அவர் வீசிய பந்தில் சிக்கி சர்ரே அணி பேஸ்ட்மேன் க்ளீன் போல்ட் ஆனார். அந்த வீடியோவை லார்ட்ஸ் கிரிக்கெட் மைதான நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி இருக்கிறது.
இந்த பதிவை பார்த்த பலர் அர்ஜூன் டெண்டுல்கரின் அபாரமான பந்துவீச்சை பாராட்டி வருகின்றனர். இந்த போட்டியில் 11 ஓவர்கள் வீசிய அர்ஜூன் டெண்டுல்கர் 50 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.