Arjuna Award 2023 : தமிழக வீராங்கனை வைஷாலி உட்பட 26 பேருக்கு அர்ஜுனா விருது.. முழு பட்டியல் இங்கே
டெல்லி : தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உள்பட 26 பேருக்கு 2023 ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
செஸ் வீராங்கனை வைஷாலி இந்த ஆண்டு செஸ் உலகின் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றார். இந்திய அளவில் அந்த பட்டத்தை வென்ற மூன்றாவது பெண் என்ற சாதனையையும் படைத்தார் அவர். இந்த நிலையில் அவருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாட்மிண்டன் வீரர்களான சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோருக்கு விளையாட்டுத்துறையின் உயரிய கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆடவர் இரட்டையர் போட்டியில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்திய நிலையில் அவர்களுக்கு இந்த உயரிய விருது அளிக்கப்படுகிறது.
2023 அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் 26 வீரர்களின் பட்டியல் -
ஓஜஸ் பிரவின் (வில்வித்தை)
அதிதி கோபிசந்த் சுவாமி (வில்வித்தை)
முரளி ஸ்ரீசங்கர் (தடகளம்)
பருல் சவுத்ரி (தடகளம்)
முகமது ஹுசாமுதீன் (குத்துச்சண்டை)
ஆர் வைஷாலி (செஸ்)
முகமது ஷமி (கிரிக்கெட்)
அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்)
திவ்யகிருதி சிங் (குதிரையேற்றம்)
திக்ஷா தாகர் (கோல்ப்)
கிரிஷன் பகதூர் பதக் (ஹாக்கி)
சுசீலா சானு (ஹாக்கி)
பவன் குமார் (கபடி)
ரிது நேகி (கபடி)
நஸ்ரீன் (கோ-கோ)
பிங்கி (புல்வெளி பந்துகள்)
ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (துப்பாக்கி சூடு)
இஷா சிங் (துப்பாக்கி சூடு)
ஹரிந்தர் பால் சிங் சந்து (ஸ்குவாஷ்)
அய்ஹிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்)
சுனில் குமார் (மல்யுத்தம்)
ஆன்டிம் (மல்யுத்தம்)
ரோஷிபினா தேவி ( வுஷு)
ஷீத்தல் தேவி (பாரா வில்வித்தை)
இல்லூரி அஜய் குமார் ரெட்டி (பார்வையற்றோர் கிரிக்கெட்) பிராச்சி யாதவ் (பாரா கேனோயிங்)


Click it and Unblock the Notifications