Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அனுஷ்கா கர்ப்பம்.. ஜனவரியில் குழந்தை.. விராட் கோலி அறிவிப்பு.. குவியும் வாழ்த்து மழை

துபாய் : ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ள விராட் கோலி தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Bravoவின் 500 Wickets சாதனை; T20ல் வரலாறு | OneIndia Tamil

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தன்னுடைய குழந்தை பிறக்கவுள்ளதாகவும் அதையடுத்து தாங்கள் மூன்று பேராக மாறுவோம் என்றும் விராட் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா சர்மாவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தன்னுடைய கர்ப்பம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விராட் கோலி அறிவிப்பு

விராட் கோலி அறிவிப்பு

இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் ஆதர்ச தம்பதிகளாக உள்ளனர். சமூக வலைதளங்களில் இவர்கள் போடும் பதிவுகள் மூலம் கொண்டாட்டமான இவர்களது வாழ்க்கையை அறிந்து கொள்ள முடியும். இந்த கொண்டாட்ட பதிவுகள் இவர்களின் ரசிகர்களை வியப்புக்குள்ளாக்கி வருகிறது. அதிகமான லைக்குகளையும் பெற்று தருகிறது.

விராட் மகிழ்ச்சிப் பதிவு

விராட் மகிழ்ச்சிப் பதிவு

கடந்த 2017 டிசம்பர் மாதத்தில் இவர்கள் இருவருக்கும் சிறப்பான முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் குழந்தையை ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், தற்போது அனுஷ்கா சர்மா கர்ப்பம் தரித்துள்ளதாக விராத் கோலி அறிவித்துள்ளார். ஜனவரி 2021ல் தங்களது குழந்தையை எதிர்பார்ப்பதாகவும், அப்போது மூவராக தாங்கள் மாறுவோம் என்றும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

ஒரே மாதிரியான புகைப்படம்

ஒரே மாதிரியான புகைப்படம்

இந்நிலையில் அனுஷ்கா சர்மாவும் தனது டிவிட்டர் பக்கத்தில் அதே டிவீட்டை பதிவிட்டுள்ளார். இவர்கள் இருவரும் ஒரே மாதிரியான புகைப்படத்தையும் ஒரே மாதிரியான டிவீட்டையும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து டிவிட்டர் பக்கத்தில் இவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.

துபாயில் உள்ள விராட் கோலி

துபாயில் உள்ள விராட் கோலி

ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் கேப்டனாக உள்ளார் விராட் கோலி. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக அவர் தற்போது துபாயில் உள்ளார். 53 நாட்களுக்கு ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்ற பின்பு அடுத்ததாக ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்க இந்திய அணி நேரிடையாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தன்னுடைய குழந்தை பிறந்த பிறகுதான் இந்தியாவிற்கு கோலி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, August 27, 2020, 14:26 [IST]
Other articles published on Aug 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+