Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாபெரும் வரலாறு படைத்த அர்ஷ்தீப் சிங்.. டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தி புதிய ரெக்கார்டு

கொல்கத்தா: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் போட்டியின் முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்து அணியை மிரள வைத்தார். இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் பிலிப் சால்ட் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

இதன் மூலம் இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அர்ஷ்தீப் சிங் முதல் இடத்தையும் பிடித்திருக்கிறார்

Arshdeep Singh took most wickets for India in T20I breaks Yuzvendra Chahal record

அடுத்து மூன்றாவது ஓவரில் பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்தினார். பென் டக்கெட் 4 ரன்கள் எடுத்த நிலையில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் அர்ஷ்தீப் சிங் சர்வதேச டி20 போட்டிகளில் 97 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும், இந்திய அணிக்காக அதிக டி20 விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை செய்து இருக்கிறார்.

முன்னதாக யுஸ்வேந்திர சாஹல் 80 போட்டிகளில் 96 விக்கெட்களை வீழ்த்தி இருந்ததே இந்திய அணிக்காக ஒரு பந்துவீச்சாளர் டி20 போட்டிகளில் வீழ்த்திய அதிக விக்கெட் எண்ணிக்கையாக இருந்தது. அந்த சாதனையை அர்ஷ்தீப் சிங் முறியடித்து இருக்கிறார்.

அர்ஷ்தீப் சிங் வெறும் 61 போட்டிகளிலேயே 97 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2022ல் தான் அர்ஷ்தீப் சிங் அறிமுகம் ஆகி இருந்தார். வெறும் மூன்று ஆண்டுகளுக்குள் அவர் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் -

97 விக்கெட்கள் - அர்ஷ்தீப் சிங் (61 போட்டிகள்)
96 விக்கெட்கள் - யுஸ்வேந்திர சாஹல் (80 போட்டிகள்)
90 விக்கெட்கள் - புவனேஷ்வர் குமார் (87 போட்டிகள்)
89 விக்கெட்கள் - ஜஸ்பிரித் பும்ரா (70 போட்டிகள்)
89 விக்கெட்கள் - ஹர்திக் பாண்டியா (110 போட்டிகள்)

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முகமது ஷமி நீண்ட இடைவெளிக்கு பின் இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், இந்திய அணியில் ஒரே ஒரு முழு நேர வேகப் பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங் மட்டுமே இடம் பெற்று இருந்தார். தன் மீதான நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அவர் தான் வீசிய முதல் இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.

Story first published: Wednesday, January 22, 2025, 19:28 [IST]
Other articles published on Jan 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+