Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய அணிக்கு நற்செய்தி.. 2வது டெஸ்ட் போட்டி.. அருண் ஜெட்லி மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட்!

டெல்லி: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஓரளவிற்கு நிம்மதி கொள்ளும் அளவிற்கு பிட்ச்- உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் பரபரப்பு கட்டத்தை நோக்கி சென்று வருகிறது. முதல் டெஸ்டில் பெற்ற அபார வெற்றியின் மூலம் இந்தியா 1 - 0 என முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து 2வது டெஸ்ட் போட்டி நாளை ( பிப்ரவரி 17) தொடங்கவுள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2வது டெஸ்ட்

2வது டெஸ்ட்

இந்திய களங்களில் ஸ்பின்னர்களை சமாளிப்பதற்காக பலகட்ட பயிற்சிகளை எடுத்த போதும், முதல் டெஸ்ட் போட்டியில் 177 மற்றும் 91 ரன்களுக்கெல்லாம் ஆஸ்திரேலிய அணி சுருண்டது. எனவே 2வது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என முடிவுடன் களமிறங்குகிறது. இதற்காக முதல் டெஸ்ட் நடந்த அதே நாக்பூர் பிட்ச்-லேயே பேட்டிங் பயிற்சி செய்துவிட்டு டெல்லிக்கு வந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு நற்செய்தி

ஆஸ்திரேலியாவுக்கு நற்செய்தி

இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நற்செய்தியை கொடுத்துள்ளது டெல்லி மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட். இந்த மைதானத்தில் முன்பெல்லாம் முதல் நாளில் இருந்தே பந்துவீச்சாளர்களின் கை ஓங்கி இருக்கும். ஆனால் சமீப காலமாக முதல் 2 நாட்களுக்கு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான சூழலை பிட்ச் ஏற்படுத்தி தருகிறது. இதனால் ரன்களும் சிறப்பாகவே வருகிறது.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து நன்கு ரன் சேர்த்துவிடுவது நல்லதாகும். நாட்கள் போக போக பிட்ச் ஸ்லோவாகி வழக்கம் போல சுழற்பந்துவீச்சாளர்கள் ஆக்‌ஷனை தொடங்கிவிடுவார்கள். டெல்லியில் நல்ல வெயிலுக்கும் வாய்ப்பு இருப்பதால் 3வது நாளில் இருந்து ஸ்பின்னர்களுக்கு உதவி இருக்கும். எனவே ரோகித்தும் பேட்டிங்கை தேர்வு செய்ய தான் முனைப்பு காட்டுவார்.

சராசரி ஸ்கோர் என்ன?

சராசரி ஸ்கோர் என்ன?

இந்த மைதானத்தில் சராசரியாக முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 342 ரன்கள் வரை அடிக்கலாம் எனக்கூறப்பட்டுள்ளது. 2வது இன்னிங்ஸில் நிதானமாக நின்று விளையாடினால் 300 ரன்களை எட்டலாம். ஆனால் இந்த ஸ்கோர்கள் அப்படியே 2வது இன்னிங்ஸில் குறைந்துவிடும். இங்கு கடைசியாக நடந்த 5 டெஸ்ட் போட்டிகள் இந்திய அணி 3 வெற்றிகளை பெற்றுள்ளது. 2 போட்டி சமனில் முடிந்துள்ளது.

Story first published: Thursday, February 16, 2023, 17:49 [IST]
Other articles published on Feb 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+