For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னது! இந்த தம்பி பிர்லா குடும்பமா? ரஞ்சி ட்ராபியில் முதல் சதம் அடித்த பிர்லா வாரிசு

கொல்கத்தா : இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் குமார மங்களம் பிர்லாவின் மகன் ஆர்யமான் பிர்லா ரஞ்சி ட்ராபி தொடரில் ஆடி சதம் அடித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநில அணியில் இடம் பெற்றுள்ள ஆர்யமான் பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார்.

இதுவே இவரது முதல் ரஞ்சி போட்டி சதமாகும். சென்ற ஆண்டு முதல் இவர் ரஞ்சி தொடரில் பங்கேற்று வருகிறார்.

ஆர்யமான் பிர்லா முதல் சதம்

தற்போது 21 வயதாகும் ஆர்யமான் பிர்லா மத்திய பிரதேச கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார். சென்ற சீசனில் தன் முதல் ரஞ்சி போட்டியை ஆடிய இவர், இந்த சீசனில் சதத்தை அடித்துள்ளார். அண்டர் - 23 அணியில் சிறப்பாக ஆடியதை அடுத்து ரஞ்சி அணியில் இவருக்கு இடம் அளிக்கப்பட்டது என கூறப்படுகிறது.

அசத்தல் ஆட்டம் ஆடும் ஆர்யமான்

அசத்தல் ஆட்டம் ஆடும் ஆர்யமான்

இந்த ரஞ்சி சீசனில் தமிழ்நாடு அணிக்கு எதிராக 51 ரன்கள் அடித்த ஆர்யமான், அடுத்து பெங்கால் அணிக்கு எதிராக 189 பந்துகளில் 103 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.

அழுத்தமும், கவனமும்

அழுத்தமும், கவனமும்

தனது குடும்பத்தின் பெயர் என்பது தனக்கு அழுத்தத்தை கொடுத்தாலும், விளையாட்டில் பந்தின் மீது மட்டுமே கவனத்தை செலுத்தி வருகிறேன் என கூறுகிறார் ஆர்யமான். கடந்த 4-5 வருடங்களாக கிரிக்கெட் ஆடி வருவதாகவும், தன் பெற்றோர் தனது முடிவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் எனவும் கூறினார் இந்த இளம் வீரர்.

ஐபிஎல் வாய்ப்பு பிரகாசம்

ஐபிஎல் வாய்ப்பு பிரகாசம்

ஆர்யமான் 2018 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்தார். எனினும், ஒரு போட்டியில் கூட களம் இறங்கவில்லை. இந்த ரஞ்சி சீசனில் அரைசதம், சதம் என அடித்து வருவதால் அனேகமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நாம் இவரை திரையில் பார்க்கலாம்.

Story first published: Saturday, November 17, 2018, 19:33 [IST]
Other articles published on Nov 17, 2018
English summary
Aryaman Birla from the Birla family hit his maiden Ranji trophy century
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+