Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இரவு முழுக்க விவாதம்.. கவனமாக எடுக்கப்பட்ட அணி.. காலையில் வந்து பார்த்தால் அதிர்ச்சி.. ஷாக் சம்பவம்

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியை கவனமாக தேர்வு செய்தும் கூட இன்று களத்தில் முக்கியமான வீரர் ஒருவர் காயம் அடைந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடர் தொடங்கியதில் இருந்தே இந்திய வீரர்கள் வரிசையாக காயம் அடைந்து வருகிறார்கள். போதிய பயிற்சி இன்றி இந்திய வீரர்கள் களமிறங்கிய காரணத்தால் வரிசையாக இந்திய வீரர்கள் காயம் அடைந்து வருகிறார்கள்.

அதிலும் டெஸ்ட் தொடர் தொடங்கிய பின் இந்திய வீரர்கள் பலர் வரிசையாக காயம் அடைந்தனர். முக்கிய பவுலர்கள் எல்லோரும் காயம் அடைந்தனர்.

 காயம்

காயம்

தொடக்கத்தில் இந்திய அணியின் பவுலர் ஷமி காயம் அடைந்தார். அதன்பின் கே. எல் ராகுல், உமேஷ் யாதவ் காயம் அடைந்தனர். கடந்த போட்டியில் அஸ்வின், பும்ரா, ஜடேஜா, விஹாரி ஆகியோர் காயம் அடைந்தனர். இதனால் இந்திய அணி முக்கியமான பவுலர்களை இழந்தது.

பவுலர்கள்

பவுலர்கள்

இந்த நிலையில் இன்றைய போட்டிக்கான வீரர்களை பிசிசிஐ மிகவும் கவனமாக தேர்வு செய்தது. இரவு முழுக்க ஆலோசனை செய்து இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது. வீரர்களுக்கு காயம் உள்ளதா, யாரெல்லாம் பிட்டாக இருக்கிறார்கள் என்று கடும் ஆலோசனைக்கு பின்பே அணி தேர்வு நடந்தது.

90%

90%

இதன் காரணமாகவே 90% பிட்டாக இருந்த அஸ்வின், பும்ரா போன்ற வீரர்களும் கூட அணிக்குள் எடுக்கப்படவில்லை. ஆனால் இவ்வளவு கவனமாக வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்பும் கூட இன்று இந்திய வீரர் சைனி காயம் அடைந்தார். பவுலிங் செய்யும் போது இவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது.

காயம்

காயம்

தொடையில் பிடிப்பு போல இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 5 பந்துகள் போட்ட நிலையில் சைனி வெளியேறினார். காலில் காயம் ஏற்பட்ட நிலையில் சைனி கடுமையான வலியில் துடித்தார். இதன்பின் பாதியில் சைனி வெளியேறினார். இதனால் இந்திய வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதையடுத்து கடைசி பந்தை போட ரோஹித் சர்மா வந்தார். பல கட்ட ஆலோசனைக்கு பின் இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட பின்பும் கூட இன்று சைனி காயம் அடைந்தது அதிர்ச்சி அளித்தது. காயத்தால் வெளியேறிய சைனி 20 நிமிட ஓய்விற்கு பின் மீண்டும் களத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, January 15, 2021, 9:32 [IST]
Other articles published on Jan 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+