Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் காதலில் விழுந்த பிரித்வி ஷா.. லவ் பேர்ட்ஸாக மாறிய ஜோடி.. யார் இந்த நடிகை நிதி தபாடியா?

மும்பை: இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, மீண்டும் நடிகை நிதி தபாடியாவுடன் காதலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய யு19 அணி கேப்டனாக உலகக்கோப்பை வென்ற பின், 18 வயதிலேயே ஐபிஎல் ஒப்பந்தத்தை பெற்றார் பிரித்வி ஷா. அதன்பின் அதே ஆண்டில் இந்திய டெஸ்ட் அணிக்காக அறிமுகமான அவர், முதல் போட்டியிலேயே அதிரடி சதம் விளாசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதனை வியந்த இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சச்சின், சேவாக், லாரா ஆகியோரை சேர்த்து உருவாக்கிய கலவை தான் பிரித்வி ஷாவை பாராட்டினார்.

As per sources, Cricketer Prithvi Shaw fell in love with Actress Nidhi Tapadia again

இதனால் இந்திய கிரிக்கெட்டுக்கு அடுத்த சச்சின் கிடைத்துவிட்டார் என்று அனைவரும் பாராட்டிய நிலையில், ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி பெயரை கெடுத்துகொண்டார். இதன்பின் ஃபிட்னஸ் பிரச்னை, யூட்யூடன் உடனான மோதல், சீனியர் வீரர்களுடன் மோதல், ஐபிஎல் தொடரில் சொதப்பல் என்று பிரத்வி ஷாவின் கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் லண்டன் ஒன் டே கோப்பையில் பிரித்வி ஷா நார்த்தம்டன்ஷையர் அணிக்காக கலந்து கொண்டார். அப்போது ஒரு இரட்டை சதம், ஒரு சதம் என்று மீண்டும் தனது ஃபார்மை மீட்டெடுத்தார். ஆனால் அந்த தொடரிலும் பிரித்வி ஷாவால் முழுமையாக விளையாட முடியவில்லை. காயமடைந்ததால், மீண்டும் இந்தியாவுக்கு திரும்பினார்.

இந்த நிலையில் பிரித்வி ஷா காதலில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாடலும் நடிகையுமான நிதி தபாடியாவுடன் காதல் உறவில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் பஞ்சாப் பாடல்களில் நாயகியாக நடித்து பிரபலமானவர். கடந்த மே மாதம் துபாயில் நடைபெற்ற ஐஐஎஃப்ஏ நிகழ்ச்சியில் பிரித்வி ஷா - நிதி தபாடியா இருவரும் ஒன்றாக தோன்றினர். அதன்பின் பிரித்வி ஷா, நடிகை நிதியின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியது.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் பிரித்வி ஷா - நிதி தபாடியா இருவருக்கும் பிரேக் அப் செய்ததாகவும், இருவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்ததால் பிரிய முடிவு செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் காயமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வரும் பிரித்வி ஷா, தனது இன்ஸ்டாகிராமில் All is Well என்று பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக இருவரும் மீண்டும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

Story first published: Thursday, September 14, 2023, 19:09 [IST]
Other articles published on Sep 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+