Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காலரை தூக்கி விட்டுக்கோங்க.. அஸ்வினை பார்த்து நடராஜன் சொன்ன வார்த்தை.. இப்போ தேசிய அளவில் ஹிட்!

சென்னை: தமிழக மூத்த வீரர் அஸ்வினை இன்னொரு தமிழக வீரர் நடராஜன் அழைக்கும் விதம் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்தியா அதிரடியாக ஆடி வருகிறது.இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

கோலி - அஸ்வின் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி வருகிறார்கள். கோலி 39, அஸ்வின் 35 ரன்கள் எடுத்துள்ளனர். இங்கிலாந்தை விட இந்திய அணி 353 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது.

அஸ்வின்

அஸ்வின்

தமிழக மூத்த வீரர் அஸ்வினை இன்னொரு தமிழக வீரர் நடராஜன் அழைக்கும் விதம் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. அஸ்வினுக்கு இதுவே தற்போது சிறப்பு பெயராக மாறியுள்ளது. இந்திய அணியில் நடராஜன் கடந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அறிமுகம் ஆனார்.

அதிரடி

அதிரடி

அதன்பின் டி 20, டெஸ்ட் போட்டிகளில் நடராஜன் அறிமுகம் ஆகி கலக்கினார். நடராஜனின் இந்த ஆட்டம் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இதையடுத்து சக தமிழக வீரர் அஸ்வின் நடராஜனை பேட்டி எடுத்து இருந்தார். தனது யூ டியூப் சேனலிலும், பிசிசிஐ பேட்டியிலும் நடராஜனை அஸ்வின் பேட்டி எடுத்து இருந்தார்.

நடராஜன் அண்ணா

நடராஜன் அண்ணா

இதில் அஸ்வினை நடராஜன் தனது ஸ்டைலில் அண்ணா அண்ணா என்று அழைத்தார். ஸ்டார்க் போட்ட பந்தையே பார்க்கலை அண்ணா என்று வாய் நிறைய அஸ்வினை அண்ணா அண்ணா என்று அழைத்தார். அஸ்வின் - நடராஜன் இடையே இருக்கும் இந்த "ப்ரோமான்ஸ்" இணையம் முழுக்க வைரலானது.

வைரல்

வைரல்

இந்த நிலையில் தற்போது அஸ்வினின் செல்ல பெயரே அண்ணாவாக மாறி உள்ளது. ஆஷ் அண்ணா என்று இவரை எல்லோரும் அழைக்க தொடங்கி உள்ளனர். தற்போது தேசிய அளவில் ஆஷ் அண்ணா என்ற வார்த்தை வைரலாகி வருகிறது. அஸ்வினின் பேட்டிங்கை பாராட்டி ஆஷ் அண்ணா என்ற வார்த்தை டிரெண்டாகி வருகிறது.

செம டிரெண்டிங்

செம டிரெண்டிங்

நேற்றும் கூட இதே வார்த்தை தேசிய அளவில் வைரலானது. நேற்று அஸ்வின் 5 விக்கெட் எடுத்தார். இதை பாராட்டும் வகையில் நேற்றும் ஆஷ் அண்ணா என்று வைரலானது. தமிழக வீரர்கள் தற்போது தேசிய அளவில் கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார்களாக உருவெடுத்துள்ளனர்.

Story first published: Monday, February 15, 2021, 13:08 [IST]
Other articles published on Feb 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+