Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. அட்டாக்கிங் கிரிக்கெட்னா இது தான்.. முதல் நாளில் இங்கிலாந்து 393/8 டிக்ளேர்

பர்மிங்காம் : ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 393 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது.

பொறுமையாக விளையாடும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணி புதிய வரலாற்றை எழுதி வருகிறது. மேலும், முதல் இன்னிங்சில் அனைத்து அணிகளும் கைவசம் இருக்கும் விக்கெட்டை வைத்து பெரிய இலக்கை தொட பார்ப்பார்கள்.

Ashes 1st test - England declared 393 runs in first innings vs australia

ஆனால், இங்கிலாந்து அணி கைவசம் 2 விக்கெட்டை வைத்து, பெரிய இலக்கை எட்ட விடாமல், முதல் நாளிலேயே ஆஸ்திரேலியாவையும் பேட்டிங் செய்ய வைக்க வேண்டும் என்பதற்காக 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில், தைரியமாக டிக்ளேர் செய்தனர்.

ஆட்டத்தின் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் பேட்ஸ்மேன் ஷாக் கிராலி , பாட் கம்மின்ஸ் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரிக்கு விரட்டி ஆச்சரிய தொடக்கத்தை ரசிகர்களுக்கு அளித்தார்.

பென் டக்கட் 12 ரன்களில் வெளியேறினாலும், இங்கிலாந்து தங்களுடைய ஆட்டத்தின் போக்கை கொஞ்சம் கூட மாற்றிகொள்ளவில்லை. போப் 31 ரரன்களில் வெளியேற, ஷாக் கிராலி 56 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி 20.2வது ஓவரில் எல்லாம் 100 ரன்களை கடந்தது.

ஷாக் கிராலி 61 ரன்களில் ஆட்டமிழக்க, ஹாரி புருக் துரதிர்ஷ்டவசமான முறையில் 37 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து போல்ட் ஆனார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னில் பெவிலியன் திரும்ப, ஜோ ரூட் மற்றும் பாரிஸ்டோ இணைந்து அதிரடியாக விளையாடி வந்து ரன்களை குவித்தனர்.

12 பவுண்டரிகளை அடித்த பாரிஸ்டோ, ஆஸ்திரேலியா பவுலர்களை கதற வைத்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாரிஸ்டோ 78 பந்தில் 78 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் மறுமுனையில் 4 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் என கலக்கிய ஜோ ரூட் தனது 30வது சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவு செய்து, பிராட்மேன் ரெக்கார்டை முறியடித்தார்.

இதன் மூலம் ஜோ ரூட் களத்தில் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் நின்ற நிலையில், இங்கிலாந்து அணி 393 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 14ரன்கள் எடுத்திருந்தனர்.

Story first published: Friday, June 16, 2023, 23:24 [IST]
Other articles published on Jun 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+