Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3வது டெஸ்சில் இங்கிலாந்து வெற்றி.. 'குடை ராட்டின' வெற்றி தோல்விகளால் பரபரக்குது ஆஷஸ்

பர்மிங்காம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் ஆடிவருகிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய மூன்றாவது போட்டி பர்மிங்காமில் நடந்தது.

சுருண்ட ஆஸி.

சுருண்ட ஆஸி.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 136 ரன்களில் சுருண்டது. ஆன்டர்சன் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை சாய்த்தார். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 281 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்திருந்தது.

121 ரன் வெற்றி இலக்கு

121 ரன் வெற்றி இலக்கு

நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. நெவில் 59 ரன்கள் எடுத்தார். டெயில் என்ட் பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் நடையை கட்டியதால் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதனையடுத்து இங்கிலாந்து வெற்றிக்கு 121 ரன்கள் இலக்காக நிர்ணயமானது.

சபாஷ் பெல்

சபாஷ் பெல்

எளிய இலக்குதான் என்றபோதிலும், பிட்ச் ஸ்விங் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால், இங்கிலாந்து ரசிகர்கள் நகத்தை கடித்தபடி பரபரப்புடனே ஆட்டத்தை ரசித்தனர். துவக்க வீரர்கள் லியாத் 12, கேப்டன் அலிஸ்டர் குக் 7 ரன்களில் வெளியேறியதால், பரபரப்பு உச்சத்துக்கு போனது. ஆனால், இயான் பெல் மற்றும் ஜோ ரூட் ஆகிய அந்த அணியின் மிடில் ஆர்டர் நம்பிக்கை நட்சத்திரங்கள், அணியை சரியவிடாமல் முட்டுக் கொடுத்தனர்.

இங்கிலாந்து முன்னிலை

இங்கிலாந்து முன்னிலை

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பெல் 65 ரன்களுடனும், ரூட் 38 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இதன் மூலம் இத்தொடரில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.

குடை நாட்டினம்

குடை நாட்டினம்

முதல் போட்டியில் இங்கிலாந்து எளிதாக வென்ற நிலையில், 2வது போட்டியில் ஆஸ்திரேலியா அதைவிட இலகுவாக இங்கிலாந்தை வீழ்த்தியது. இப்போது 3வது டெஸ்டில் ஆஸ்திரேலியா சுருண்டு, இங்கிலாந்து எளிய வெற்றி பெற வழிவகுத்துள்ளது. இதுபோன்ற குடை ராட்டின சுற்றுதலால், ஆஷஸ் தொடர் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

Story first published: Saturday, August 1, 2015, 12:56 [IST]
Other articles published on Aug 1, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+