For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்க பார்ரா... ஆஸி- இங்கிலந்து மோதலுக்கு "நாட்டாமை"யாக செயல்பட்ட இந்திய- பாக் நடுவர்கள்!

நாட்டிங்காம்: அரிதிலும் அரிதான ஒரு சம்பவம் இன்று கிரிக்கெட் உலகில் நடந்தது. அதாவது பரம வைரிகளான ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் போட்டியின்போது இன்னொரு பரம வைரிகளான இந்தியா - பாகிஸ்தானைச் சேர்ந்த நடுவர்கள், அம்பயர்களாகப் பணியாற்றியதுதான் அந்த அரிய நிகழ்வு.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரில் முதல் 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வென்றுள்ளன.

இந்த நிலையில் இன்று நாட்டிங்காமில் 4வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில்தான் இந்தியாவைச் சேர்ந்த எஸ். ரவி மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆலிம் தர் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

4வது டெஸ்ட்

4வது டெஸ்ட்

இங்கிலாந்தின் கை ஓங்கியுள்ள இந்தத் தொடரில் முக்கியமான 4வது டெஸ்ட் இன்று நாட்டிங்காமில் தொடங்கியது. முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய, ஆஸ்திரேலியாவை, இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பிரித்து மேய்ந்து விட்டார். இதனால் முதல் இன்னிங்ஸை 60 ரன்களுக்கு இழந்தது ஆஸ்திரேலியா.

இந்திய - பாக். நடுவர்கள்

இந்திய - பாக். நடுவர்கள்

இந்தப் போட்டியின் நடுவர்களாக இந்தியாவின் எஸ்.ரவியும், பாகிஸ்தானின் ஆலிம் தர்ரும் செயல்படுகிறார்கள். இது ஒரு அரிய நிகழ்வாகும்.

எலைட் நடுவர் ரவி

எலைட் நடுவர் ரவி

49 வயதான ரவி சமீபத்தில்தான் ஐசிசியின் எலைட் குழுவில் இடம் பெற்றார். அதேசமயம், ஆலிம் தர் பல போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிய அனுபவம் படைத்தவர்.

97 டெஸ்ட்

97 டெஸ்ட்

தர் 97 டெஸ்ட் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். ரவிக்கு இது 8வது போட்டியாகும். 2013ம் ஆண்டு ரவி தனது முதல் டெஸ்ட் நடுவர் பணியை ஆற்றியிருந்தார்.

5வது நிகழ்வு

5வது நிகழ்வு

டெஸ்ட் வரலாற்றில் இந்திய, பாக் நடுவர்கள் இணைந்து பணியாற்றுவது இது 5வது முறையாகும். கடைசியாக 2009ம் ஆண்டு டர்பனில் நடந்த தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின்போது இந்தியாவின் அமீஷ் சஹேபா மற்றும் ஆலிம் தர் இணைந்து பணியாற்றியிருந்தனர்.

Story first published: Thursday, August 6, 2015, 18:28 [IST]
Other articles published on Aug 6, 2015
English summary
One of the rarest sights was witnessed today during the 4th Ashes Test between England and Australia here as India and Pakistan umpires officiated together.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+