Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் இன்று தொடக்கம்! மீண்டு எழுமா ஆஸ்திரேலியா?

லண்டன்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் லண்டனில் இன்று தொடங்குகிறது.

மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

Ashes 2015: Moeen Ali doubtful for second Test

கார்டிப்பில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, கடந்த ஆஷஸ் தொடரில் எதிரி நாட்டு மண்ணில் அடைந்த ஓயிட் வாஷுக்கு பழி தீர்த்துக் கொண்டது. 1-0 என்ற முன்னிலையுடன் வீறு கொண்டு எழுந்துள்ள இங்கிலாந்து இன்று, லண்டன் லாட்ஸ் மைதானத்தில், தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை முதலாவது டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் ரோஜர்ஸ், டேவிட் வார்னர் தவிர மற்ற எவருமே சிறப்பாக ஆடவவில்லை. பந்து வீச்சில் மிட்செல் ஜான்சன், ஸ்டார்க் ஆகிய நம்பிக்கை நட்சத்திரங்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

எனவே 2வது டெஸ்டில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ஆஸ்திரேலியா வியூகங்களை தீட்டி வருகிறது. அந்த அணியில் இரு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. தொடர்ந்து சொதப்பிவரும், ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் கழற்றி விடப்படுகிறார். வாட்சனுக்கு பதிலாக மற்றொரு ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் அணிக்குள் வருகிறார்.

இதே போல் விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின், தனது பர்சனல் விவகாரங்களுக்காக இந்த டெஸ்டில், அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக புதுமுக விக்கெட் கீப்பர் 29 வயதான பீட்டர் நெவில் அறிமுகம் ஆகிறார்.

அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி முதலாவது டெஸ்டில் கிடைத்த வெற்றியின் உற்சாகத்துடன் களம் காணுகிறது. ஆனால் சுழற்பந்து நம்பிக்கை நட்சத்திர வீரரான மொயீன் அலி விலாப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருவது அந்த அணிக்கு பின்னடைவாகும்.

மொயீன் அலி, முதலாவது டெஸ்டில் அரைசதம் அடித்ததுடன் 5 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தியவர். மொயீன் அலி உடல்தகுதி பெறாவிட்டால் அடில் ரஷித் இடம் பெறுவார். மற்றபடி இங்கிலாந்து அணி முழு நம்பிக்கையுடன் ஆயத்தமாக உள்ளது.

கடைசி 17 ஆஷஸ் தொடர் களை எடுத்துக் கொண்டால் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற அணியே 15 முறை தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்த டெஸ்ட் இந்திய நேரப்படி மாலை 3.30மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Story first published: Thursday, July 16, 2015, 10:36 [IST]
Other articles published on Jul 16, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+