Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

8 விக்கெட்கள் எடுத்தாச்சு.. ஆனாலும் ஸ்டீவ் ஸ்மித்தால் மண்டை காய்ந்த இங்கிலாந்து கேப்டன்!

Recommended Video

Ashes 2019 | Steve Smith | ஸ்டீவ் ஸ்மித்தால் மண்டை காய்ந்த இங்கிலாந்து கேப்டன்!- வீடியோ

பிர்மிங்காம்: ஆஷஸ் தொடரின் முதல் நாளே சிறப்பான டெஸ்ட் போட்டியை பார்த்த திருப்தி எல்லோருக்கும் கிடைத்து விட்டது.

அதற்கு முக்கிய காரணம், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித். கடந்த ஆண்டு பந்து சேத விவகாரத்தில் தடை செய்யப்பட்டு, மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்பினார் ஸ்டீவ் ஸ்மித்.

டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோரும் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பினர். ஆனால், முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியை காப்பாற்றியது ஸ்மித் மட்டுமே. இங்கிலாந்து கேப்டனை தனி ஆளாக கதற விட்டார் ஸ்மித்.

ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியா பேட்டிங்

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என கூறப்படும் நிலையில், ஆஸ்திரேலியா என்ன திட்டம் வைத்துள்ளது என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

சரிந்த விக்கெட்கள்

சரிந்த விக்கெட்கள்

ஆனால், ஆஸ்திரேலியாவின் எந்த திட்டமும் இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராடு, கிறிஸ் வோக்ஸ் முன் எடுபடவில்லை. இருவரும் விக்கெட் வேட்டை நடத்தினர். ஸ்டீவ் ஸ்மித் தவிர அத்தனை முழுமையான பேட்ஸ்மேன்களும் சரிந்தனர். ட்ராவிஸ் ஹெட் 35 ரன்கள் எடுத்து சற்றே போராடினார்.

தாங்கிப் பிடித்த ஸ்டீவ் ஸ்மித்

தாங்கிப் பிடித்த ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலியா 122 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது. எப்படியும் 150 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பீட்டர் சிடில் கட்டையைப் போட்டு, ஸ்மித் நீண்ட நேரம் பேட்டிங் ஆட உதவி செய்தார். ஸ்மித் தனியாக போராடி அதிரடி ஆட்டம் ஆடினார்.

ஆஸி.வை காப்பாற்றிய ஸ்மித்

ஆஸி.வை காப்பாற்றிய ஸ்மித்

தன் 24வது டெஸ்ட் சதத்தை கடந்த ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து போர், சிக்ஸ் என ரன் குவிப்பில் ஈடுபட்டார். பீட்டர் சிடில் 85 பந்துகள் தாக்குப் பிடித்து 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த நாதன் லியோன்-உம் ஸ்மித்துக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடினார்.

இங்கிலாந்து திணறல்

இங்கிலாந்து திணறல்

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஸ்மித்துக்கு யாரை பந்து வீச அழைப்பது, எப்படி பீல்டிங் அமைப்பது என புரியாமல் எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டே இருந்தார். எதுவும் பலன் அளிக்கவில்லை.

பீல்டிங் குழப்பம்

பீல்டிங் குழப்பம்

ஸ்மித் அதிரடியாக ரன் குவித்ததால், ஒரு கட்டத்தில் விக்கெட் வீழ்ச்சிக்கு ஏற்றது போல் பீல்டிங் அமைக்காமல், ரன் குவிப்பை கட்டுப்படுத்த பவுண்டரி எல்லை அருகே பீல்டர்களை குவித்தார். அந்த அளவிற்கு குழப்பத்தில் இருந்தார் ஜோ ரூட்.

ஆஸ்திரேலியா எடுத்த ரன்கள்

ஆஸ்திரேலியா எடுத்த ரன்கள்

ஆஸ்திரேலியா 44 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 122 ரன்கள் எடுத்த நிலையில், முதல் இன்னிங்க்ஸ் முடிவில் 80.4 ஓவர்கள் ஆடி 284 ரன்கள் குவித்து இருந்தது. ஸ்டீவ் ஸ்மித் 144 ரன்கள் குவித்து அசத்தினார்.

Story first published: Friday, August 2, 2019, 11:35 [IST]
Other articles published on Aug 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+