For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுத்த வேஸ்ட்.. ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் அடிக்கும் வரை நின்று வேடிக்கை பார்த்து கதறிய இங்கிலாந்து!

Recommended Video

Ashes 2019 : Steve Smith scored double century

மான்செஸ்டர் : ஆஷஸ் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் பெரிய ஸ்கோரை எட்டியது.

இங்கிலாந்து அணி பல வாய்ப்புகளை கோட்டை விட்டு, மிக மோசமான நிலையில் உள்ளது. இத்தனை வாய்ப்புகளையா ஒரு அணி கோட்டை விடும்? என்று கேட்கும் வகையில் தான் இருந்தது இங்கிலாந்து அணியின் செயல்பாடு.

ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் அடித்தது கூட அவர்கள் கோட்டை விட்ட வாய்ப்புகளால் தான். அவரை இரட்டை சதம் அடிக்க விட்டு வேடிக்கை பார்த்துள்ளது இங்கிலாந்து அணி.

முதல் நாள் என்ன ஆனது?

முதல் நாள் என்ன ஆனது?

இங்கிலாந்து அணி ஸ்டீவ் ஸ்மித்தை வெளியேற்ற முடியாமல் கதறியது கண் கூடாக தெரிந்தது. முதல் நாளில் கூட ஸ்மித் தவிர மற்ற வீரர்களின் விக்கெட்களை விரைவாக எடுத்து வந்தது இங்கிலாந்து. ஆஸ்திரேலியா 183 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்தது.

பெரிய சிக்கல்

பெரிய சிக்கல்

ஆனால், இரண்டாம் நாளில் ஸ்மித் ரன் எடுத்துக் கொண்டே செல்ல, ஆஸ்திரேலியா 300 ரன்கள் மட்டுமே எடுக்கும் என்று நம்பிக் கொண்டு இருந்த இங்கிலாந்து அணிக்கு பெரிய சிக்கல் ஆரம்பம் ஆனது.

2 வாய்ப்புக்கள் போச்சு

2 வாய்ப்புக்கள் போச்சு

உண்மையில், ஸ்மித் இரண்டு முறை ஆட்டமிழந்து இருக்க வேண்டும். ஆனால், இங்கிலாந்து அணி அந்த வாய்ப்புகளை கோட்டை விட்டது. அது தான் அந்த அணியின் கதறலுக்கு உண்மையான காரணம்.

என்ன ஆனது?

என்ன ஆனது?

ஸ்டீவ் ஸ்மித் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் வீசிய பந்தை அவரிடமே திருப்பி அடித்தார். வேகமாக வந்த பந்தை ஆர்ச்சர் கேட்ச் பிடிக்காமல் விட்டார். பந்து பவுண்டரி சென்றது. அடுத்து, 118 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மித் கேட்ச் கொடுத்தார். ஆனால், ரீப்ளேவில் அது நோ பால் என தெரிந்தது.

பெய்ன் பெற்ற வாய்ப்பு

பெய்ன் பெற்ற வாய்ப்பு

ஸ்மித் மட்டுமில்லாமல், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னும் இரண்டு வாய்ப்புகள் பெற்று அரைசதம் அடித்தார். அவர் 9 ரன்களிலும், 49 ரன்களிலும் கொடுத்த கேட்ச்களை கோட்டை விட்டது இங்கிலாந்து. அவர் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து வீரர்கள் முகபாவம்

இங்கிலாந்து வீரர்கள் முகபாவம்

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் பிற வீரர்கள், ஸ்மித் கொடுத்த வாய்ப்புகளை கோட்டை விட்ட போது காட்டிய முகபாவமே அவர்கள் எந்த அளவு வெறுத்துப் போய் இருக்கிறார்கள் என்பதை காட்டியது.

நிம்மதிப் பெருமூச்சு

நிம்மதிப் பெருமூச்சு

ஆஸ்திரேலியா 497 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்க்ஸ்-ஐ டிக்ளர் செய்தது. அப்போது தான் இங்கிலாந்து அணி ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. அதுவும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் டென்லி 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியா வெற்றி வாய்ப்பு

ஆஸ்திரேலியா வெற்றி வாய்ப்பு

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 298 ரன்கள் எடுத்தால் மட்டுமே பாலோ ஆன் பெறுவதில் இருந்து தப்பிக்கலாம். இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 400 ரன்களுக்கு மேல் எடுத்தால் டிரா செய்ய வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து வெற்றி பெறுவது மிகவும் கடினம் தான். ஆஸ்திரேலியா வெற்றிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

Story first published: Friday, September 6, 2019, 10:20 [IST]
Other articles published on Sep 6, 2019
English summary
Ashes 2019 4th Test : England missed many wicket chances against Australia
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+