For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செம காரம்.. "பிரிபிரி சிக்கனை" சாப்பிட்டு வந்து தான் பிரிச்சு மேய்ஞ்சேன்.. அதிர வைத்த பென் ஸ்டோக்ஸ்!

Recommended Video

Ben Stokes eat Knock off Nandos PiriPiri chicken before the blasting day

லீட்ஸ் : இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியை பெற்றது இங்கிலாந்து.

அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் முதலில் படு மந்தமாக ஆடி வந்தார். விக்கெட்கள் சரிந்த உடன் அதிரடிக்கு மாறிய அவர், 359 ரன்கள் என்ற இமாலாய வெற்றி இலக்கை துவம்சம் செய்தார்.

அவர் எப்படி இப்படி வெறி கொண்டு ஆடினார்? முந்தைய நாள் இரவு என்ன செய்தார்? என கேட்ட போது அவர் சொன்ன பதிலை கேட்டு எல்லோருமே வாயை பிளந்து விட்டார்கள். முதல் நாள் மந்தமாக ஆடி வந்த அவர், அடுத்த நாள் வெறியாட்டம் ஆடியதற்கு காரணம் அப்போது தான் புரிந்தது.

மூன்றாவது டெஸ்ட்

மூன்றாவது டெஸ்ட்

ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வென்று ஆக வேண்டிய கட்டாயத்தில் ஆடியது. இந்தப் போட்டியில் தோற்றால் தொடரை கைப்பற்ற முடியாத நிலை ஏற்படும் என்பதால் இக்கட்டில் இருந்தது.

பென் ஸ்டோக்ஸ் மோசம்

பென் ஸ்டோக்ஸ் மோசம்

இந்த நிலையில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் 179 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 67 ரன்கள் எடுத்து அதிர்ச்சி அளித்தது. அதிலும் துணை கேப்டனான பென் ஸ்டோக்ஸ் மோசமான ஷாட் ஆடி ஆட்டமிழந்தார். கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

அடுத்து ஆஸ்திரேலியா 246 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணிக்கு 359 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி இத்தனை பெரிய இலக்கை அதற்கு முன் டெஸ்ட் போட்டியில் எட்டியதே இல்லை.

பென் ஸ்டோக்ஸ் மந்தம்

பென் ஸ்டோக்ஸ் மந்தம்

இந்த நிலையில் டென்லி 50, ஜோ ரூட் 77 ரன்கள் சேர்க்க இங்கிலாந்து அணி 154 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்தது. அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 50 ரன்களுக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். மந்தமான ஆட்டத்திலேயே இது தான் சிறந்தது என கூறும் படி ஆடி விக்கெட்டை காத்தார்.

ஒரே நம்பிக்கை

ஒரே நம்பிக்கை

அடுத்த நாள் இங்கிலாந்து அணி சரசரவென விக்கெட்களை இழந்தது. பென் ஸ்டோக்ஸ் மட்டுமே இங்கிலாந்து அணியின் கடைசி நம்பிக்கை. அப்போது அதிரடிக்கு மாறினார் ஸ்டோக்ஸ். 286 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது இங்கிலாந்து.

பிரித்து மேய்ந்தார்

பிரித்து மேய்ந்தார்

இந்த நிலையில், 10வது விக்கெட்டுக்கு லீச் உடன் ஜோடி சேர்ந்து சிக்ஸ் மழை பொழிந்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சை தனி ஆளாக பிரித்து மேய்ந்தார் ஸ்டோக்ஸ். இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டோக்ஸ் 135 ரன்கள் குவித்தார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

பென் ஸ்டோக்ஸ் போட்டிக்கு பின் பேசிய போது முந்தைய நாள் இரவு என்ன செய்தார் என கேட்கப்பட்டது. அப்போது அவர் சொன்ன பதிலில் தான் பென் ஸ்டோக்ஸ் மரண அடி அடித்ததற்கான காரணம் ஒளிந்து இருந்தது.

இரண்டு நாள் உணவு

இரண்டு நாள் உணவு

மந்தமாக பேட்டிங் ஆடியதற்கு முன் இரவு பாஸ்தா உண்டதாகவும், அதிரடி ஆட்டம் ஆடிய நாளுக்கு முன் இரவு பிரிபிரி சிக்கன் மற்றும் சில சாக்லேட் பார்கள் சாப்பிட்டதாக கூறி அதிர வைத்தார்.

இது தான் காரணமா?

இது தான் காரணமா?

பிரிபிரி அல்லது பெரிபெரி சிக்கன் என அழைக்கப்படும் ஒரு வகை சிக்கன் வறுவல் மிகவும் காரமானது. இங்கிலாந்தில் ஆளை சாய்த்து விடும் என்ற அர்த்தத்தில் நாக்-ஆஃப் என அழைக்கப்படும் அந்த சிக்கன் உணவை தான் முந்தைய நாள் இரவு சாபிட்டுள்ளர் பென் ஸ்டோக்ஸ். இது தான் அவருக்கு வேகம் கொடுத்து இருக்கும் என இப்போது பேச்சு கிளம்பி உள்ளது.

உணவு கட்டுப்பாடு மீறல்

உணவு கட்டுப்பாடு மீறல்

உண்மையில், இது இங்கிலாந்து அணியின் உணவு கட்டுப்பாடு மீறல் ஆகும். ஆனால், அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை பென் ஸ்டோக்ஸ். அவருக்கு இதற்கு அணி ரீதியிலான தண்டனை கொடுக்கலாம்.

நாயகன் இவர் தான்

நாயகன் இவர் தான்

ஆனால், அவருக்கு விருது கொடுப்பது பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார்கள். இங்கிலாந்தின் உயரிய விருதான "நைட்ஹுட்" விருதை அவருக்கு அளிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலர் கூறி உள்ளனர்.

Story first published: Monday, August 26, 2019, 18:43 [IST]
Other articles published on Aug 26, 2019
English summary
Ashes 2019 : Ben Stokes eat Knock off Nandos PiriPiri chicken before the blasting day
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+