Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடச்சே.. இப்படியா ஒரு டீமே கேவலமா அவுட் ஆவாங்க.. ஆஸி.விடம் மொத்தமா போண்டியான இங்கிலாந்து!

லீட்ஸ் : ஆஷஸ் 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெறும் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெரும் அதிர்ச்சி அளித்தது.

ஆஸ்திரேலிய அணியும் ஒன்றும் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 179 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் மோசமான முறையில் ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியா பேட்டிங்

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாம் போட்டி டிரா ஆனது. இந்த நிலையில் மூன்றாவது போட்டி துவங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மழையால் பாதிக்கப்பட்ட, ஈரமான ஆடுகளத்தில் தடுமாறியது.

ஆஸ்திரேலியா எடுத்த ரன்கள்

ஆஸ்திரேலியா எடுத்த ரன்கள்

வார்னர் 61, லாபுஷாக்னே 74 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களே எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் டிம் பெய்ன் மட்டும் கொஞ்சம் அதிகமாக 11 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் 179 ரன்கள் எடுத்தது.

ஆர்ச்சர் அசத்தல்

ஆர்ச்சர் அசத்தல்

இங்கிலாந்து அணியின் ஆர்ச்சர் மிரட்டலாக பந்து வீசி 6 விக்கெட்கள் வீழ்த்தினார். இதெல்லாம் ஒரு ரன்னா? இங்கிலாந்து எப்படியும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் என பலரும் கருதிய நிலையில் ஆஸ்திரேலியாவை விட மோசமாக ஆடியது இங்கிலாந்து.

இங்கிலாந்து படுமோசம்

இங்கிலாந்து படுமோசம்

இங்கிலாந்து அணியில் ஒரு வீரர் தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்தனர். டென்லி அதிகபட்சமாக 12 ரன்கள் எடுத்தார். ஒரே ஒரு வீரர் மட்டுமே டக் அவுட் ஆனார். அது கேப்டன் ஜோ ரூட். அவர் தான் இங்கிலாந்து அணியின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை ரன்கள்?

எத்தனை ரன்கள்?

இங்கிலாந்து அணி 67 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வெறும் 27.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது. அந்த அணியின் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆடிய பொறுப்பற்ற ஷாட்டை பார்த்து இங்கிலாந்து ரசிகர்கள் வெறுப்படைந்தனர்.

ஆஸ்திரேலியா பந்துவீச்சு

ஆஸ்திரேலியா பந்துவீச்சு

ஆஸ்திரேலிய அணியின் ஹேசல்வுட் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்கள் வீழ்த்தினார். நான்கு பந்துவீச்சாளர்கள் மட்டுமே பந்து வீசி இருந்தனர். அதிலும், நாதன் லியோன் ஒரு ஓவர் மட்டுமே வீசி இருந்தார்.

1948க்குப் பின்

1948க்குப் பின்

1948க்குப் பின் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியிடம் குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்து இருக்கிறது. அதுவும் சொந்த மண்ணில் மோசமாக ஆடி இருக்கிறது. இங்கிலாந்து ரசிகர்கள் கடும் சோகத்தில் இணையத்தில் புலம்பி வருகின்றனர்.

Story first published: Friday, August 23, 2019, 20:11 [IST]
Other articles published on Aug 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+