Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தலைக்கு குறி வைச்சா மட்டும் பத்தாது தம்பி! இங்கிலாந்து பவுலரை சவால் விட்டு சாய்த்த ஸ்டீவ் ஸ்மித்!

Recommended Video

Ashes 2019 : Steve Smith scored double century

மான்செஸ்டர் : ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு சவால் விட்டு, அந்த சவாலில் வென்று காட்டி இருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித்.

தன்னை பவுன்சரால் தாக்கி, ஓய்வு எடுக்க வைத்த ஆர்ச்சருக்கு சவால் விடும் வகையில் இந்த போட்டிக்கு முன்னர் பேசி இருந்தார் ஸ்டீவ் ஸ்மித். ஆர்ச்சரும் அந்த சவாலை ஏற்றுக் கொள்வது போல பதில் அளித்தார். ஆனால், அதில் தோல்வி அடைந்துள்ளார்.

இரண்டாவது டெஸ்ட்

இரண்டாவது டெஸ்ட்

ஆஷஸ் தொடரின் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் ஸ்மித் அரைசதம் அடித்து ஆடி வந்தார். அப்போது அவரை வெளியேற்ற இங்கிலாந்து அணி போராடி வந்தது. ஆர்ச்சர் பந்து வீச அழைக்கப்பட்டார்

தலையில் காயம்

தலையில் காயம்

எதிர்பாராத வகையில் மின்னல் வேகத்தில் பவுன்சர் பந்தால் ஸ்மித்தை தாக்கினார் ஆர்ச்சர். பந்து ஸ்மித்தின் கழுத்து மற்றும் தலைப்பகுதியில் பட்டது. நிலைகுலைந்து கீழே விழுந்தார் ஸ்டீவ் ஸ்மித். சிறிது ஓய்வுக்கு பின் மீண்டும் வந்து பேட்டிங் செய்தார்

இங்கிலாந்து கள்ள ஆட்டம்

இங்கிலாந்து கள்ள ஆட்டம்

ஆனாலும், மறுநாள் அவருக்கு மூளை கலங்கி இருப்பது தெரிந்து பாதி போட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டார். இங்கிலாந்து அணி திட்டமிட்டு ஸ்டீவ் ஸ்மித் தலையில் தாக்கியதாக சிலர் குற்றம் சாட்டினார்கள்.

மீண்டு வந்த ஸ்மித்

மீண்டு வந்த ஸ்மித்

அதை அடுத்து மூன்றாம் டெஸ்ட் போட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்ட ஸ்மித், நான்காவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். இந்தப் போட்டிக்கு சில நாட்கள் முன் ஆர்ச்சர் என்னை தாக்கிதான் வீழ்த்தினார். விக்கெட்டை எடுக்கவில்லை என சவால் விடும் வகையில் பேசினார். அந்த சவாலை ஆர்ச்சரும் ஏற்றுக் கொண்டார்.

இரட்டை சதம்

இரட்டை சதம்

நான்காம் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் இரண்டு நாட்கள் பேட்டிங் செய்து இரட்டை சதம் அடித்தார். ஆனால், ஆர்ச்சரால் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. ஒரே ஒரு முறை அதற்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆர்ச்சர் கோட்டை விட்ட வாய்ப்பு

ஆர்ச்சர் கோட்டை விட்ட வாய்ப்பு

65 ரன்கள் அடித்த நிலையில் ஆர்ச்சர் வீசிய ஓவரில், ஸ்மித் பந்தை வேகமாக ஆர்ச்சர் வசமே அடித்தார். சற்றே கடினமான அந்த கேட்ச்சை ஆர்ச்சர் பிடித்து இருக்க முடியும் என்றாலும், கோட்டை விட்டார்.

ஒரு விக்கெட் கூட இல்லை

ஒரு விக்கெட் கூட இல்லை

முதல் இன்னிங்க்ஸில் 27 ஓவர்கள் வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. ஸ்டீவ் ஸ்மித் விக்கெட் மட்டும் இல்லாமல், ஒரு விக்கெட் கூட எடுக்காமல் சவாலில் மோசமாக தோற்றுள்ளார் ஆர்ச்சர்.

தாக்குவது முக்கியம் இல்லை

தாக்குவது முக்கியம் இல்லை

ஆளை குறி வைத்து தாக்குவது முக்கியம் இல்லை. விக்கெட் எடுப்பது தான் முக்கியம் என சவால் விட்டு சாதித்துக் காட்டி இருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் 497 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் 211 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 23 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து உள்ளது.

Story first published: Friday, September 6, 2019, 13:25 [IST]
Other articles published on Sep 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+