Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யப்பா.. என்னா வேகம்! எப்படி தான் இப்படி பால் போடுறாரோ? இளம் வீரரைக் கண்டு மிரண்ட ஸ்டீவ் வாஹ்!

லண்டன் : டெஸ்ட் போட்டிகளில் தான் வீசிய முதல் சில ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஸ்டீவ் வாஹ்-வை மிரள வைத்து விட்டார் ஜோப்ரா ஆர்ச்சர்.

இங்கிலாந்து அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் போல முதல் போட்டி ஆடும் முன்பே பெரிய புகழ் பெற யாராலும் முடியாது. அந்த அளவு தன் வேகப் பந்துவீச்சு திறமையால் பெரும் புகழ் பெற்று விட்டார்.

ஐபிஎல் உலகக்கோப்பை என சென்ற இடம் எல்லாம் தன் முத்திரையை பதித்து இருக்கிறார் ஜோப்ரா ஆர்ச்சர்.

புகழ்ச்சி

புகழ்ச்சி

அவரை சச்சின் முதல் உலகின் அனைத்து ஜாம்பவான்களும் புகழ்ந்து விட்டனர். தற்போது ஆஷஸ் தொடர் நடைபெறும் நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் அவரைப் புகழ்ந்து இருக்கிறார்.

ஜோப்ரா ஆர்ச்சர் அறிமுகம்

ஜோப்ரா ஆர்ச்சர் அறிமுகம்

உலகக்கோப்பை தொடருக்கு சில வாரங்கள் முன்பு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகம் ஆனார். தற்போது ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆகி உள்ளார்.

உலகக்கோப்பை அசத்தல்

உலகக்கோப்பை அசத்தல்

உலகக்கோப்பை தொடரில் மிக சிறப்பாக பந்து வீசிய ஆர்ச்சர் மிகக் குறைந்த ரன்கள் கொடுத்து அதிக விக்கெட்கள் வீழ்த்தினார். இங்கிலாந்து அணியின் மற்ற அனுபவ வேகப் பந்துவீச்சாளர்களை விட ஒருபடி மேலே பந்து வீசினார்.

கலக்கல் பவுலிங்

கலக்கல் பவுலிங்

அவரது பந்துவீச்சின் சிறப்பே அவரது வேகம் தான். அவர் பந்தை வீச ஓடி வரும் வேகம் மிகவும் குறைவாக இருக்கும். ஆனால், பந்து மின்னல் வேகத்தில் வரும். அதுவும் லைன் மற்றும் லென்த் துல்லியமாக இருக்கும். பேட்ஸ்மேன்கள் தடுப்பாட்டம் ஆடினால் மட்டுமே தப்பிக்க முடியும் என்ற நிலையில் தான் ஆடுவார்கள்.

ஸ்டீவ் வாஹ் மிரண்டார்

ஸ்டீவ் வாஹ் மிரண்டார்

ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில் அறிமுகம் ஆன ஜோப்ரா ஆர்ச்சர் இரண்டாம் நாளின் கடைசியில் பந்து வீசும் வாய்ப்பை பெற்றார். சில ஓவர்களே வீசிய அவர் ஒரு விக்கெட் எடுத்ததுடன் 6 மெய்டன் ஓவர்கள் வீசினார். அதைக் கண்டு மிரண்டு போனார் ஸ்டீவ் வாஹ்.

என்ன வேகம்?

என்ன வேகம்?

"உங்கள் தலை எழுத்தை நீங்களே எழுத வேண்டும் என்றால் நீங்கள் பவுலிங் போட விரும்புவீர்கள். ஆர்ச்சர் வித்தியாசமான பந்து வீசும் முறையை கையாள்கிறார். மிகவும் ரிலாக்ஸாக ஓடி வந்து, எங்கேயும் இல்லாமல் அதிக வேகத்தை உண்டாக்குகிறார். இவரைப் புரிந்து கொள்ள சில காலம் ஆகும்" என்று கூறி பாராட்டி இருக்கிறார்.

Story first published: Saturday, August 17, 2019, 18:59 [IST]
Other articles published on Aug 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+