Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவிடம் மரண அடி வாங்கிய இங்கிலாந்து.. தோல்விக்கு உண்மையான காரணம் இதுவா?

Recommended Video

Watch Video : Australia won Ashes 2019 series

மான்செஸ்டர் : 2019 ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2 - 1 என்ற கணக்கில் வென்று அசத்தி உள்ளது.

கடைசியாக 2017-18இல் நடந்த ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா தன் சொந்த மண்ணில் கைப்பற்றி இருந்தது. தற்போது இங்கிலாந்து மண்ணிலேயே அந்த அணியை வீழ்த்தி, 18 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து அணியை, இங்கிலாந்திலேயே வீழ்த்தி இருக்கிறது ஆஸ்திரேலியா.

கேள்விகள்

கேள்விகள்

50 ஓவர் உலகக்கோப்பை வென்று அசத்தலாக இருந்த இங்கிலாந்து, டெஸ்ட் போட்டிகளிலும் வலுவாகவே காட்சி அளித்தது. ஆனாலும், இங்கிலாந்து அணியின் தோல்விக்கு என்ன தான் காரணம்? ஸ்டீவ் ஸ்மித் தான் காரணமா?

வெற்றி - தோல்விகள்

வெற்றி - தோல்விகள்

ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் நான்கு போட்டிகள் நடந்துள்ளன. அதில் இங்கிலாந்து ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. அந்தப் போட்டியிலும் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்து இருக்க வேண்டும். பென் ஸ்டோக்ஸ் நிகழ்த்திய அதிரடி அற்புதத்தால் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்டீவ் ஸ்மித் என்ன செய்தார்?

ஸ்டீவ் ஸ்மித் என்ன செய்தார்?

இங்கிலாந்து தோல்விக்கு ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தான் காரணம் என பரவலாக கூறப்பட்டாலும், அது மட்டுமே காரணம் இல்லை. ஸ்டீவ் ஸ்மித் நான்கு டெஸ்ட் போட்டிகளில் இரண்டரை போட்டியில் மட்டுமே ஆடினார். இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்க்ஸில் இருந்து காயம் காரணமாக விலகினார்.

ஸ்மித் ரன் மழை

ஸ்மித் ரன் மழை

இந்த இரண்டரை இன்னிங்க்ஸில் அவர் 671 ரன்கள் குவித்து இருக்கிறார். இது யாராலும் சிந்தித்து பார்க்க முடியாத ரன் மழையாக இருப்பது உண்மை தான். அது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதே சமயம், இங்கிலாந்து அணியிலும் சில குறைகள் உள்ளன.

ஆண்டர்சன் காயம்

ஆண்டர்சன் காயம்

இங்கிலாந்து அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தொடரின் துவக்கத்தில் காயம் அடைந்தார். அதனால், ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராடு மட்டுமே வேகப் பந்துவீச்சை சமாளித்து வந்தனர்.

கிறிஸ் வோக்ஸ்

கிறிஸ் வோக்ஸ்

கிறிஸ் வோக்ஸ் நல்ல வேகப் பந்துவீச்சாளர். பேட்டிங்கிலும் கை கொடுப்பார். அவரை நான்காவது டெஸ்ட் போட்டியில் நீக்கியதும் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

பேட்டிங் சிக்கல்

பேட்டிங் சிக்கல்

இங்கிலாந்து அணியின் பேட்டிங் வலுவாக இருப்பது போல காட்சி அளித்தாலும் பேட்டிங் வரிசை நிலை இல்லாமல் உள்ளது. பேட்ஸ்மேன்கள் இடம் மாறுவது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது.

துவக்க வீரர் குழப்பம்

துவக்க வீரர் குழப்பம்

அலஸ்டர் குக் ஓய்வு பெற்றதில் இருந்து சரியான துவக்க வீரரை கண்டறிய முடியாமல் தவித்து வருகிறது இங்கிலாந்து. நான்காவது டெஸ்டில் துவக்கத்தில் ஆடி வந்த ஜேசன் ராயை, மிடில் ஆர்டரில் களமிறக்கினர். அதுவும் பெரிய பலனை அளிக்கவில்லை.

Story first published: Monday, September 9, 2019, 20:23 [IST]
Other articles published on Sep 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+