For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நான் வந்துட்டேன்.. நீங்க கிளம்புங்க! மீண்டும் சதம் அடித்து கோலி ரெக்கார்டை காலி செய்த ஸ்டீவ் ஸ்மித்!

Recommended Video

கோலியின் சாதனைகளை அடிச்சு நொறுக்கிய ஸ்மித்

மான்செஸ்டர் : இந்திய அணியின் விராட் கோலியை டெஸ்ட் போட்டிகளில் முந்தி இருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித்.

கோலி டெஸ்ட் போட்டிகளில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை தக்க வைத்து இருந்தார்.

அதை ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் அடித்த சதம் மூலம் தகர்த்து எறிந்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்.

பொறுப்பான ஆட்டம்

பொறுப்பான ஆட்டம்

ஆஷஸ் தொடரில் சிறப்பாக ஆடி வரும் ஸ்மித் நான்காவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். டேவிட் வார்னர் டக் அவுட், ஹாரிஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் உள்ளே வந்த ஸ்மித், லாபுஷாக்னேவுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பாக ஆடினார்.

26வது சதம்

26வது சதம்

பொறுப்பாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் தன் 26வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்து அசத்தினார். இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசி எட்டு இன்னிங்க்ஸ்களில் இது ஸ்மித்தின் ஐந்தாவது சதம் ஆகும்.

குறைந்த இன்னிங்க்ஸ்

குறைந்த இன்னிங்க்ஸ்

26 டெஸ்ட் சதங்களை குறைந்த இன்னிங்க்ஸ்களில் அடித்த வீரர்கள் பட்டியலில் டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித். பிராட்மேன் 69 இன்னிங்க்ஸ்களில் 26 சதம் அடித்த நிலையில், ஸ்மித் 121 இன்னிங்க்ஸ்களில் அதை செய்துள்ளார். மூன்றாம் இடத்தில் சச்சின் 136 இன்னிங்க்ஸ்களுடன் இருக்கிறார்.

கோலியை முந்தினார்

கோலியை முந்தினார்

சச்சினை முந்தியது போலவே, சதங்களில் விராட் கோலியை முந்தி இருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித். கோலி 25 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். அதை முந்தியதோடு டெஸ்ட் போட்டிகளில் தான் கிங் என மீண்டும் ஒருமுறை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

அரைசதமும் அதிகம்

அரைசதமும் அதிகம்

ஏற்கனவே, கோலியை விட அதிக அரைசதம் அடித்து இருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித். கோலி 22 டெஸ்ட் அரைசதங்கள் அடித்து உள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 25 அரைசதங்கள் அடித்து உள்ளார்.

ஒரே தொடரில் கோலி காலி

ஒரே தொடரில் கோலி காலி

நீண்ட காலம் தடையில் இருந்த ஸ்டீவ் ஸ்மித், ஒரே ஒரு ஆஷஸ் தொடரில் பாதி ஆடிக் கொண்டு இருக்கும் போதே விராட் கோலி அவர் இல்லாத போது அடைந்த முன்னேற்றத்தை எல்லாம் உடைத்து எறிந்து விட்டார்.

தரவரிசை போச்சே

தரவரிசை போச்சே

கடந்த சில நாட்கள் முன்பு அறிவிக்கப்பட்ட ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலியை ஒரு புள்ளியில் வீழ்த்தி முதல் இடத்தை தட்டிப் பறித்தார் ஸ்டீவ் ஸ்மித். ஸ்மித் தடைக்கு பின் கோலி பெற்ற முதல் இடத்தை,ஆஷஸ் தொடரின் பாதியிலேயே காலி செய்தார் ஸ்மித்.

இருவரின் சராசரி

இருவரின் சராசரி

கோலியை விட ஸ்டீவ் ஸ்மித்தின் டெஸ்ட் பேட்டிங் சராசரி அதிகம். ஸ்மித்தின் சராசரி 64 ஆகும். விராட் கோலியின் சராசரி 53 மட்டுமே. பிராட்மேனுக்கு அடுத்து அதிக டெஸ்ட் பேட்டிங் சராசரி வைத்துள்ள வீரர் ஸ்டீவ் ஸ்மித் தான்.

சிறந்த பேட்ஸ்மேன் யார்?

சிறந்த பேட்ஸ்மேன் யார்?

மொத்தத்தில் விராட் கோலியை அனைத்து வழிகளிலும் முந்தி இருக்கும் ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் போட்டிகளில் தான் சிறந்த பேட்ஸ்மேன் என நிரூபித்து இருக்கிறார். கோலி அவரை முறியடிக்க அதிக முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதே உண்மை.

Story first published: Thursday, September 5, 2019, 19:30 [IST]
Other articles published on Sep 5, 2019
English summary
Ashes 2019 : Steve Smith hit 26th test century and breaks Kohli’s record
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+