Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“மதுபோதையில் அளவுக்கு மீறிய ஆட்டம்” ஆஸி, வீரர்கள் மீது பெண் காவலர் அதிரடி நடவடிக்கை.. புதிய சர்ச்சை

சிட்னி: இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அளவுக்கு அதிகமான மதுபோதையில் பிரச்சினை செய்து வந்ததால் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

Recommended Video

Root, Anderson Kicked Out After Police Crash Post- Ashes Party | OneIndia Tamil

மிகவும் பிரபலமான இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது.

இதில் ஆஸ்திரேலிய அணி 4 - 0 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

வீரர்கள் கொண்டாட்டம்

வீரர்கள் கொண்டாட்டம்

இந்த தொடர் முடிந்ததையடுத்து இருநாட்டு கிரிக்கெட் வீரர்களும் மதுபானங்களுடன் கொண்டாடி வருகின்றனர். அதுவும் பயோ பபுளில் இருப்பதால் இந்த முறை அளவுக்கு அதிகமான மதுபானங்களை எடுத்துக்கொண்டு ஆட்டம் போடும் வீடியோக்கள் இணையத்தில் பரவின. இந்நிலையில் அவர்களின் வரம்பு மீறிய செயல்கள் காவல் துறை வரை சென்றுள்ளது.

மதுபோதை சர்ச்சை

மதுபோதை சர்ச்சை

ஆஸ்திரேலிய வீரர்கள் நாதன் லியான், ட்ராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி மற்றும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அவர்கள் தங்கியுள்ள க்ரோன் ப்ளாசா ஹோட்டலின் பால்கனி அருகே அமர்ந்து மதுபோதையில் ஓவர் ஆட்டம் போட்டுள்ளனர். அவர்கள் அளிக்கும் தொந்தரவுகளை பொறுத்துக்கொள்ள முடியாத ஹோட்டல் வாடிக்கையாளர்கள் போலீசாரை அழைத்துள்ளனர்.

நடவடிக்கை

நடவடிக்கை

இதனையடுத்து அங்கு விரைந்த பெண் காவலர்கள், வீரர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கூறினர். முன்னணி விளையாட்டு வீரர்கள் என்றும் பார்க்காத காவலர்கள், நேரம் போக போக வார்த்தைகளை கடுமையாக்கினர். இதனால் 4 வீரர்களும் உடனடியாக தங்களது மதுபானங்களை எடுத்துக்கொண்டு வெளியேறினர். இதன்பின்னர் அவர்கள் மீது எந்தவித வழக்குகளையும் பதிவு செய்யாமல் போலீசார் கிளம்பிச் சென்றனர்.

 இங்கிலாந்தின் சர்ச்சை

இங்கிலாந்தின் சர்ச்சை

மதுபான கலாச்சாரத்தால் தான் இங்கிலாந்து அணி ஆஷஸில் மிகவும் மோசமான தோல்வியை பதிவு செய்ததாக சர்ச்சைகள் உள்ளன. போட்டிகளின் இடைவேளையின் போதும் மதுபானங்களை அருந்திவிட்டு, விளையாடியுள்ளனர். இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநரே பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இப்படி பல சர்ச்சைகள் இருக்கும் வேளையில் தான் ஆஸ்திரேலிய அணி வீரர்களும் மதுபான சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

Story first published: Tuesday, January 18, 2022, 18:22 [IST]
Other articles published on Jan 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+