For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போராடிய ஸ்டார்க்.. முதல் பந்திலேயே விக்கெட்.. வோக்ஸ் வேகத்தில் சிதறிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்!

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஆஷஸ் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 317 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்கள் சேர்த்தது. மிட்செல் ஸ்டார் 23 ரன்களுடனும், பேட் கம்மின்ஸ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது.

Ashes 2023: Australia all out for 317 Runs in the First innings of the 4th Test against England

அதில் இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் வீசிய பந்திலேயே கம்மின்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் ஸ்டார் சில பவுண்டரிகளை விளாசினார். ஆனால் வோக்ஸ் வேகத்தில் ஹேசல்வுட் ஸ்லிப் திசையில் கேட் கொடுத்து 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 317 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. கடைசி வரை போராடிய ஸ்டார்ட் ஆட்டமிழக்காமல் 36 ரன்களை விளாசினார்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் லபுஷேன் மற்றும் மிட்செல் மார்ஷ் தலா 51 ரன்கள் விளாசினர். அதேபோல் இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். ஆஷஸ் தொடரில் கிறிஸ் வோக்ஸ் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

Ashes 2023: Australia all out for 317 Runs in the First innings of the 4th Test against England

தற்போது 4வது போட்டியில் வோக்ஸின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நடப்பு ஆஷஸ் தொடரில் 3 இன்னிங்ஸ்களில் 11 விக்கெட்டுகளை வோக்ஸ் சாய்த்துள்ளார். இங்கிலாந்து அணி பிளாட் பிட்ச்களை அமைத்து வரும் நிலையில், வோக்ஸின் அதிவேகம் + ஸ்விங் பாணியிலான பந்துவீச்சு இங்கிலாந்து அணிக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Thursday, July 20, 2023, 16:56 [IST]
Other articles published on Jul 20, 2023
English summary
Ashes 2023: Australia got all out for 317 runs in the first session of the day 2 against England. England bowler Chris Woakes got 5 Wickets for 60 runs.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+