Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஷஸ் 2வது டெஸ்ட் - வலுவான நிலையில் ஆஸி.. இம்முறையும் இங்கிலாந்துக்கு தோல்வி தானா?

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெலுவான நிலையில் உள்ளது. டாஸ் வென்று முதலில் இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து களமிறங்கியது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்த நிலையில், இங்கிலாந்து அணி 3வது நாள் ஆட்டத்தை 278 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற ஸ்கோருடன் தொடங்கியது. ஆனால் இன்று ஆஸ்திரேலியாவின் வேகத்தை இங்கிலாந்து வீரர்களால் எதிர்கொள்ள முடியவில்லை.ஹாரி ப்ரூக், 3ஆம் நாளில் அரைசதம் கடந்தார். ஆனால் அரைசதம் அடித்த சில பந்துகளிலேயே ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த பேர்ஸ்டோவ் 16 ரன்களிலும், பிராட் 12 ரன்களிலும், ராபின்சன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதேபோல் நேதன் லயன் இல்லாததால், டிராவிஸ் ஹெட்டை வைத்தே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். அதேபோல் ஆஸி. அணியின் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.3ஆம் நாள் முதல் செஷனில் வெறும் 47 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டாகியுள்ளது.

அனைத்த விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 91 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. அதிரடி வீரர் டேவிட் வார்னர் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, முதல் டெஸ்டில் சதம் விளாசிய கவாஜா, 2வது இன்னிங்சில் ஆடுகளத்தில் பாய் விரித்து படுத்து உறங்கிவிட்டார்.

முதலில் பொறுமையாக விளையாடிய கவாஜா, பந்து ஸ்விங் ஆனது நின்ற உடன் தனது வேலையை காட்டினார். 10 பவுண்டரிகளை அடித்த கவாஜா 123 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து களத்தில் நிற்கிறார். மார்னஸ் லாபஸ்சேன் 30 ரன்களில் வெளியேற, ஸ்மித் 6 ரன்களுடன் களத்தில் உள்ளார். 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. இது இங்கிலாந்தின் ஸ்கோரை விட 221 ரன்கள் கூடுதலாகும். இன்னும் 2 நாட்கள் எஞ்சிய நிலையில், ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

Ashes 2023 - Australia in a pole position in london lords
Story first published: Saturday, July 1, 2023, 0:05 [IST]
Other articles published on Jul 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+