ஆஷஸ் 2023 - சேவாக்கின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்.. தொடக்க வீரராக டாப் 5 இடத்தை பிடித்தார்
பர்மிங்காம் : ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டேவிட் வார்னர் நடப்பாண்டுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதனால் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடரில் தன்னுடைய திறமையை நிரூபிப்பேன் என்று டேவிட் வார்னர் உறுதி அளித்திருக்கிறார். எனினும் டேவிட் வார்னர் எதிர்பார்த்ததை போல் சிறப்பான தொடக்கத்தை அளிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.

அவர் இங்கிலாந்து மண்ணில் பெரிய அளவில் எந்த ரெக்கார்டும் படைத்தது இல்லை. இந்த நிலையில் ஆஷஸ் முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் டேவிட் வானார் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கடைசி இன்னிங்சில் களமிறங்கிய டேவிட் வார்னர் இரண்டாவது இன்னிங்சில் கொஞ்சம் அதிரடியாக விளையாடினார்.
57 பந்துகளை எதிர்கொண்ட வார்னர் 36 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரிகள் அடங்கும். அரை சதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டேவிட் வார்னர் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் இந்த இன்னிங்ஸ் மூலம் டேவிட் வானர் ஒரு மிகப்பெரிய ரெக்கார்டு ஒன்றை படைத்திருக்கிறார்.
அது படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீரராக அதிக ரன்கள் அடித்தவர்கள். பட்டியலில் டேவிட் வார்னர் தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணி வீரர் வீரேந்திர சேவாக் 99 டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி 8207 ரன்கள் அடித்திருக்கிறார்.
இந்த நிலையில் டேவிட் வார்னர் 15 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அவருடன் ஒரு ரன்கள் கூடுதலாக எடுத்து தற்போது தொடக்க வீரராக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். இந்த பட்டியலில் இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக் 11 ஆயிரத்து 845 ரன்கள் உடன் முதலிடத்திலும், கவாஸ்கர் 9607 ரன்கள் உடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்காவில் கிராம் ஸ்மித் 93 ரன்கள் உடன் மூன்றாவது இடத்திலும் ஆஸ்திரேலியா வீரர் ஹைடன் 8625 ரன்கள் உடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications