Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்மித்தின் 100வது டெஸ்ட்.. தொடரை வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலியா.. பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து?

லீட்ஸ்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இன்று ஹெட்டிங்லே மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனால் ஆஷஸ் தொடரை வெல்ல மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கில் பேஸ் பால் திட்டத்தை பின்பற்றும் இங்கிலாந்து அணி, பவுலிங்கில் என்ன திட்டத்தை வைத்துள்ளது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Ashes 2023: England to play against Australia in the 3rd Test of Ashes series at Headingley

இந்த நிலையில் ஹெட்டிங்லே மைதானத்தில் ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் நேதன் லயன் காயம் காரணமாக விலகியுள்ளதால், இங்கிலாந்து அணிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. ஒருமுனையில் இருந்து நேதன் லயன் கட்டுக்கோப்பாக ரன்களை விட்டுக் கொடுக்காமல் வீசியதே ஆஸ்திரேலிய அணியின் இரு வெற்றிகளுக்கு மறைமுக காரணம். இதனால் புதிதாக வரும் இளம் வீரர் டாட் மர்ஃபியை இங்கிலாந்து அணி அட்டாக் மேல் அட்டாக் செய்யக்கூடும்.

அதேபோல் இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், டங்க் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல் போப் காயம் காரணமாக விலகியுள்ளார். இவர்கள் மூவருக்கும் பதிலாக மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ் மற்றும் மொயின் அலி ஆகியோர் களமிறங்க உள்ளனர். மிதவேகத்தில் வீசி வரும் பிராட், ராபின்சன் உடன் அதிவேகமாக வீசும் மார்க் வுட் இணைவது ஆஸ்திரேலிய அணிக்கு சவாலை கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கவனமாக விளையாட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

அதேபோல் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கும் 100வது டெஸ்ட் போட்டி இதுவாகும். சம காலத்தில் ஸ்டீவ் ஸ்மித்தை போல் ஒரு தரமான டெஸ்ட் பேட்ஸ்மேனை வேறு எங்கும் பார்க்க முடியாது. டான் பிராட்மேனுக்கு பின் அதிக சராசரியுடன் நீண்ட நாட்களாக விளையாடி வரும் வீரராக ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். இதனால் அவருக்காகவே வெற்றிபெற்று ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

ஹெட்டிங்லே மைதானத்தில் கடந்த முறை நடைபெற்ற ஆஷஸ் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் தனியாளாக ஆட்டத்தை இங்கிலாந்து பக்கம் திருப்பி அசாத்திய வெற்றியை பதிவு செய்தார். அதற்கு ஆஸ்திரேலிய அணி பதிலடி கொடுக்குமா என்ற கேள்வியும் அந்த அணி ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Story first published: Thursday, July 6, 2023, 8:58 [IST]
Other articles published on Jul 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+