For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இடியாய் இடித்த ஸ்டார்க்.. வெளுத்து கட்டிய வோக்ஸ்.. ஆஷஸ் தொடரில் முதல் அடியை அடித்த இங்கிலாந்து!

லீட்ஸ்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தை வென்று அசத்தியுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணி அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துடன் இங்கிலாந்து அணி 3வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 263 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 237 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Ashes 2023: England won by 3 Wickets against Australia in the 3rd Test at Headlingley

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 26 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஒருபக்கம் திணற, இன்னொரு பக்கம் மழை பெய்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சாதகத்தை கொடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 224 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் இங்கிலாந்து அணி வெற்றிபெற 251 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்தது.

இதனால் 4ஆம் நாள் ஆட்டத்தில் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கியது. 4ஆவது நாளினை அதிரடியாக தொடங்கிய பென் டக்கெட் 23 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த மொயின் அலியும் ஸ்டார்க் வேகத்தில் 5 ரன்களில் வெளியேறினார். இதனிடையே சிறப்பாக ஆடிய கிராலே 44 ரன்களிலும், ஜோ ரூட் 21 ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டத்தால் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்கள் சேர்த்திருந்தது.

பின்னர் ப்ரூக் - ஸ்டோக்ஸ் இணை உணவு இடைவேளை வரை விக்கெட் கொடுக்காமல் ஆடினர். இதன் காரணமாக உணவு இடைவேளையின் போது மேலும் 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவாகியது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க் பென் ஸ்டோக்ஸ் 13 ரன்களிலும், பேர்ஸ்டோவை 5 ரன்களிலும் வீழ்த்தி ட்விஸ்ட் கொடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி 171 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆனால் மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஹாரி ப்ரூக் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி தள்ளினார். இவருக்கு உதவியாக கிறிஸ் வோக்ஸ்-ம் பவுண்டரிகளை விளாச, இங்கிலாந்து அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட போது, சிறப்பாக ஆடிய ஹாரி ப்ரூக் 75 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதனால் ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஸ்டார்க்குடன் சேர்ந்து கம்மின்ஸ்-ம் அட்டாக்கில் வந்தார். ஆனால் அதிரடியாக ஆடிய வோக்ஸ் - மார்க் வுட் இணை இங்கிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. இறுதியாக வோக்ஸ் பவுண்டரி விளாசி இங்கிலாந்து அணியை வெற்றிபெற வைத்தார். இதன் மூலம் 2 போட்டிகளில் அடைந்த தோல்விக்கு இங்கிலாந்து அணி பதிலடி கொடுத்துள்ளது. இருப்பினும் மூலம் ஆஷஸ் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியே முன்னிலையில் உள்ளது.

Story first published: Sunday, July 9, 2023, 20:26 [IST]
Other articles published on Jul 9, 2023
English summary
Ashes 2023: England won by 3 wickets in the 3rd Test at Leeds. So the Ashes Series is even more poised 2-1 at this Moment.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+