For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பந்து தலையில் பட்டு என் உயிர் நண்பனை இழந்தேன்.. பொறுப்புடன் பேசுங்க.. பீட்டர்சனுக்கு லயான் பதிலடி

லண்டன் : ஆஷஸ் டெஸ்ட் தொடரில் எப்போதுமே களத்தில் நடப்பதை விட களத்திற்கு வெளியே நடப்பதும் மிகவும் பரபரப்பாக பேசப்படும். அந்த வகையில் இம்முறை இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் பேசிய பேச்சுக்கு ஆஸ்திரேலியா சுழற் பந்துவீச்சாளர் நாதன் லயான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

லண்டனில் நடைபெற்ற லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நாதன் லயானுக்கு திடீரென்று காலில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் அவர் பந்து வீசவில்லை. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய போது வலியும் தாங்க முடியாமல் நாதன் லயான் கடைசி விக்கெட்டுக்கு பேட்டிங் செய்ய வந்தார்.

Ashes 2023 - Nathan lyon hits back kevin pietersen about concussion comment

அப்போது 13 பந்துகளை நாதன் லயான் எதிர்கொண்டு கடைசி விக்கெட்டுக்கு 15 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்க்க உதவினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு 369 ரன்கள் என்று இலக்கை நிர்ணயித்தது. இந்த நிலையில் நாதன் லயானை பலரும் பாராட்டி வந்தாலும், கெவின் பீட்டர்சன் இதனை விமர்சனம் செய்தார்.

நாதன் லயான் பேட்டிங் செய்யும்போது அவரது தலையில் பந்து பட்டு இருந்தால் நாங்கள் லயனுக்கு பதிலாக வேறு ஒரு சுழற் பந்துவீச்சாளரை களம் இறக்கலாம் என்று ஆஸ்திரேலியா இப்படி முடிவை செய்திருக்கலாம். லயனுக்கு பதில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட முர்ஃபி களமிறங்கினால் ,எப்படி இருந்திருக்கும் என்று பாருங்கள். ஆஸ்திரேலியாவின் முடிவின் பின்னணியில் இது இருந்திருக்கலாம் என்று அவர் கூறியிருந்தார்.

பீட்டர்சனின் இந்த கருத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் பீட்டர்சனின் இந்த பேச்சை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நான் பேட்டிங் செய்ய வந்ததே தலையில் வந்து படுவதற்காக தான் என்று பீட்டர்சன் பேசியிருக்கிறார். இதன் மூலம் மாற்று வீரரை களமிறக்கலாம் என்று நாங்கள் எண்ணியதாக அவர் கூறுகிறார். பீட்டர்சனின் இந்தப் பேச்சுக்கு எதிரான நிலைப்பாட்டை நான் கொண்டு உள்ளவன்.

ஏனென்றால் தலையில் பந்து பட்டு என்னுடைய உயிர் நண்பன் ( philip huges) நான் களத்தில் இழந்தேன். எனவே இப்படி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பொறுப்புடன் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நாதன் லயான் சாதனை படைத்தார். மேலும் 500 விக்கெட் என்ற மைல் கல்லுக்கு அவருக்கு வெறும் நான்கு விக்கெட்டுகள் தான் தேவைப்பட்டது. இந்த நிலையில் அவர் காயம் காரணமாக விலகி இருப்பதை மிகவும் ஏமாற்றமாக இருப்பதாக கூறியுள்ளார். தாம் இனி ஆசிஸ் தொடரில் பங்கேற்க முடியாது என்பதன் நினைத்து அழுதேன் என்றும் மனம் உடைந்து இருக்கிறேன் என்றும் நாதன் லயான் கூறியிருக்கிறார்.

Story first published: Sunday, July 2, 2023, 17:27 [IST]
Other articles published on Jul 2, 2023
English summary
Ashes 2023 - Nathan lyon hits back kevin pietersen about concussion comment பந்து தலையில் பட்டு என் உயிர் நண்பனை இழந்தேன்.. பொறுப்புடன் பேசுங்க.. பீட்டர்சனுக்கு லயான் பதிலடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+