ஆஷஸ் 2023 - அனல் பறந்த வார்த்தைகள்.. கவாஜா, ராபின்சன் இடையே எழுந்த சண்டை.. ENG vs AUS 1st Test
பர்மிங்காம் : ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டு என்றால் பேட்டிங், பந்துவீச்சு பில்டிங் இது மட்டும் கிடையாது. வீரர்களுக்குள் ஏற்படும் மோதல். ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கடுப்பேற்றும் முறை. இது அனைத்தும் தான் ஆஷஸ் தொடரை இன்று அளவு வரை ரசிகர்களால் பார்க்க வைக்கப்படுகிறது.
எத்தனையோ சண்டைகள், விவாதங்கள் ஸ்லேஜிங் என நடந்து முடிந்து இருக்கிறது. பொதுவாக இரு அணிகள் விளையாடும் போது ஒரு வீரர் அடிபட்டால் அச்சச்சோ என்ன ஆனது என்று தான் கேட்பார்கள்.

ஆனால் ஆஷஸ் தொடரில் கெட்ட வார்த்தைகள் தான் வாயில் வயிலின் வாசிக்கும். இந்த நிலையில் இந்தப் பாரம்பரியம் தற்போதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா முதல் டெஸ்டில் 141 ரன்கள் எடுத்து அசத்தினார். அப்போது அவருடைய விக்கெட்டை ராபின்சன் வீழ்த்தினார்.
ஆட்டமிழந்த உஸ்மான் கவஜாவை பார்த்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இங்கிலாந்து வீரரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த மோதல் இரண்டாவது இன்னிங்ஸிலும் தொடர்ந்தது. இரு அணி வீரர்களும் தண்ணீர் குடிக்கும் போது ராபின்சானும் உஸ்மான் கவஜாவும் ஏதோ மோதி கொண்டார்கள்.
அப்போது உஸ்மான் கவாஜா, அதனால்தான் நீ பேட்ஸ்மேன் கிடையாது என்று ராபின்சன்னை பார்த்து ஏதோ கூறினார். இதனால் ராபின்சனும் கடுப்பாகி அவரை ஏதோ பேச ஆண்டரசன் இருவரையும் விலக்கி விட்டார். இந்த வீரர்கள் அப்படி என்ன பேசிக் கொண்டார்கள் என்ற விவரம் ஸ்டெம்ப் மைக்கில் சரியாக பதிவாகவில்லை. முதல் டெஸ்ட் போட்டியிலே பரபரப்பான மோதல் தொடங்கி விட்டதால் எஞ்சிய ஆசஸ் தொடர் காரசாரமாக செல்லும் என்பதில் ஐயமில்லை.


Click it and Unblock the Notifications