For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஷஸ் - பேஸ்பால் சரி.. அது என்ன கம்பால்.. திடீரென்று டிரெண்ட் ஆகும் Cumball.. இது தான் விசயமா?

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மேற்கொள்ளும் புதிய அணுகுமுறையை ரசிகர்கள் பேஸ் பால் என்று அழைக்கிறார்கள். அதாவது தைரியமான முடிவு எடுப்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி ரன்களை குவிப்பது என மிரட்டும் இங்கிலாந்து அணியை ரசிகர்கள் இப்படி அழைக்கிறார்கள்.

இதற்கு காரணம் பயிற்சியாளர் மெக்குல்லம் அணுகுமுறை தான். தாம் விளையாடிய காலத்திலேயே அதிரடியாக டெஸ்ட் போட்டிகளில் ஆடக்கூடியவர் மெக்குல்லம். இதனால் அவருடைய பெயரில் இருந்து பேஸ்பால் என்ற பெயர் வந்தது.

Ashes 2023 - What is cumball - fans trending after the australia historic win

இந்த நிலையில் நேற்று ஆசஸ் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதை அடுத்து தற்போது கம்பால் என பெயர் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

அது என்னடா கம்பால் கேட்கவே நாராசமாக இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். அது வேறொன்றும் இல்லை. நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வியின் விளிம்பில் இருந்தது. கைவசம் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இருந்த நிலையில் வெற்றி பெற 52 ரன்கள் இருந்தது.

ஆனால் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ், அதிரடியாக விளையாடி 44 ரன்கள் எடுத்தார்.நான்கு பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது. இதன் பிறகுதான் கம்பால் என்ற பெயர் டிரெண்ட் ஆனது. பாட் கம்மின்ஸ் பெயரை சுருக்கியே கம்பால் என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

எவ்வளவு பலமான அணியாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சரியான முறையில் கிரிக்கெட் விளையாடுவதே கம்பால் என்று ரசிகர்கள் அதற்கு விளக்கம் வேறு கூறி வருகிறார்கள்.நேற்று ஆஸ்திரேலியா அணி தோல்வியின் விளிம்பில் இருந்தும் கொஞ்சம் கூட பதற்றப்படாமல் ஆஸ்திரேலியா கவுண்டர் அட்டாக்கில் ஆடினார்கள். இதன் மூலம் தான் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது.

மேலும் இங்கிலாந்து வீரர்கள் எவ்வளவு அதிரடியாக ஆடினாலும், கொஞ்சம் கூட பதற்றப்படாமல் தங்களது வேலையை சரியாக செய்தது. அதன் மூலம் ஆஸ்திரேலிய முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இதற்கு கம்மின்ஸ் பங்கு மிகப் பெரியது என்பதால் தற்போது கம்பால் என்று ரசிகர்கள் அழைக்க தொடங்கி விட்டார்கள்.

Story first published: Wednesday, June 21, 2023, 16:50 [IST]
Other articles published on Jun 21, 2023
English summary
Ashes 2023 - What is cumball - fans trending after the australia historic win ஆஷஸ் - பேஸ்பால் சரி.. அது என்ன கம்பால்.. திடீரென்று டிரெண்ட் ஆகும் Cumball.. இது தான் விசயமா?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+