Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ashes: அஸ்வினின் சாதனையை உடைத்த மிட்செல் ஸ்டார்க்.. பென் ஸ்டோக்ஸை வீழ்த்துவதில் புதிய சாதனை

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2025-26 ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 5-வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இங்கிலாந்து அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான பென் ஸ்டோக்ஸை டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஆட்டமிழக்கச் செய்த பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸின் 51-வது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தில் பென் ஸ்டோக்ஸ், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து, ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

Ashes 2025-26 Mitchell Starc Breaks Ravichandran Ashwin s Record as Ben Stokes Nemesis in Ashes Test

அஸ்வினை முந்தினார் ஸ்டார்க்

இது டெஸ்ட் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸை மிட்செல் ஸ்டார்க் வீழ்த்தும் 14-வது முறையாகும். இதுவரை, இந்திய ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் 13 முறை பென் ஸ்டோக்ஸை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அஸ்வின் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தற்போது மிட்செல் ஸ்டார்க் அந்தச் சாதனையைத் தகர்த்தெறிந்து முதலிடத்தைப் பிடித்துவிட்டார்.

பென் ஸ்டோக்ஸை அதிக முறை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்:

மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) - 14 முறை
ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) - 13 முறை
நாதன் லயன் (ஆஸ்திரேலியா) - 10 முறை
ரவீந்திர ஜடேஜா (இந்தியா) - 8 முறை

நடப்பு ஆஷஸ் தொடரில் மட்டும் பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை ஸ்டார்க் கைப்பற்றுவது இது 5-வது முறையாகும். அந்த அளவிற்கு இங்கிலாந்து கேப்டனுக்கு அவர் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து வருகிறார்.

இன்னொரு உலக சாதனை காத்திருக்கிறது!

இந்த விக்கெட்டுடன் சேர்த்து, டெஸ்ட் போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க்கின் மொத்த விக்கெட் எண்ணிக்கை 430-ஆக உயர்ந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடதுகை பந்துவீச்சாளர் என்ற உலக சாதனையை இலங்கையின் ரங்கனா ஹெராத் (433 விக்கெட்டுகள்) தன் வசம் வைத்துள்ளார்.

அந்த இமாலய சாதனையை முறியடிக்க ஸ்டார்க்கிற்கு இன்னும் வெறும் 4 விக்கெட்டுகளே தேவைப்படுகின்றன. இந்தப் போட்டியிலேயே அவர் அந்தச் சாதனையை நிகழ்த்தி வரலாற்றில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோ ரூட்டின் சதம்

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபுறம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அபாரமாக விளையாடி தனது 41-வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆஷஸ் தொடரின் கடைசிப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Story first published: Monday, January 5, 2026, 10:03 [IST]
Other articles published on Jan 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+