Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ashes: கிரிக்கெட் வாழ்விலேயே சிறந்த பவுலிங்.. மெகா ரெக்கார்டுகளை உடைத்த ஸ்டார்க்.. வரலாற்று சாதனை

பெர்த்: 2025 ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே, ஆஸ்திரேலியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், தனது அனல் பறக்கும் பந்துவீச்சால் இங்கிலாந்து அணியை 172 ரன்களுக்குச் சுருட்டினார். மேலும், தனது சிறந்த டெஸ்ட் பந்துவீச்சை பதிவுசெய்து பல சாதனைகளைத் தகர்த்தெறிந்துள்ளார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று நம்பிக்கையுடன் பேட்டிங்கைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, ஸ்டார்க்கின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆரம்பம் முதலே திணறியது. வெறும் 58 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டார்க், ஆஷஸ் தொடரின் முதல் நாளிலேயே ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.

Ashes 2025 AUS vs ENG Mitchell Starc breaks multiple record with his best bowling in test cricket

இந்த பந்துவீச்சின் மூலம் மிட்செல் ஸ்டார்க் பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளார். 58 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தியதே டெஸ்ட் கிரிக்கெட்டில் மிட்செல் ஸ்டார்க்கின் சிறந்த பந்துவீச்சு ஆகும். இதற்கு முன், 2025-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 6 விக்கெட்டுகளை 9 ரன்களுக்கு வீழ்த்தியதே அவரது சாதனையாக இருந்தது. அதை இன்று முறியடித்துள்ளார்.

இந்தப் போட்டியின் மூலம் ஆஷஸ் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 13-வது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் என்ற மைல்கல்லை ஸ்டார்க் எட்டினார். கிளென் மெக்ராத், டென்னிஸ் லில்லி, ஷேன் வார்ன் போன்ற ஜாம்பவான்களின் பட்டியலில் தனது பெயரையும் பதிவு செய்துள்ளார். மேலும், புதிய பெர்த் மைதானத்தில் ஒரு பந்துவீச்சாளரின் சிறந்த தனிநபர் பந்துவீச்சு இதுவாகும்.

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், 35 ஆண்டுகளுக்கு பிறகு ஆஷஸ் தொடரின் முதல் நாளில் 7 விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை செய்துள்ளார். இதற்கு முன் 1990-91ல் கிரேக் மெக்டெர்மாட் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி செய்த இந்தச் சாதனையை நிகழ்த்தி இருந்தார்.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார். ஸ்டார்க் 9 முறை ஐந்து விக்கெட் ஹால் நிகழ்வை செய்துள்ளார். இதன் மூலம் ஆலன் டேவிட்சனை (8 முறை) அவர் முந்தினார்.

இந்தப் போட்டியின் தொடக்கத்திலேயே ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்டார்க் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தார். பின்னர், ஹாரி புரூக் மற்றும் ஆலி போப் ஆகியோர் சற்றுத் தாக்குப்பிடித்து அணியை மீட்க முயன்றனர். ஆனால், மீண்டும் பந்துவீச வந்த ஸ்டார்க், தனது துல்லியமான பந்துவீச்சால் பென் ஸ்டோக்ஸ் மற்றும் இங்கிலாந்தின் பின்வரிசை வீரர்களைச் சரித்து, 172 ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆக்கினார்.

Story first published: Friday, November 21, 2025, 13:11 [IST]
Other articles published on Nov 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+